மொகாலய உடையில் சமந்தா.. பிரபல போட்டோகிராபர் வெளியிட்ட தாறுமாறான போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்கள் வெளியாகியுள்ளன.

Advertising
>
Advertising

Also Read | ஈஷா சத்குரு நிகழ்ச்சியில் சமந்தா.. செம வைரலாகும் புதிய போட்டோஷூட் போட்டோஸ்.!

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார். 

சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது. கடைசியாக தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து இருந்தார்.

சமந்தா, தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', குஷி படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடல் செய்வார். சமீபத்தில் சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக பிரபல ஆங்கில இதழுக்காக  போட்டோஷூட்களை சமந்தா நடத்தி இருந்தார். இந்நிலையில் நடிகை சமந்தா மொகாலய காலத்தில் அறிமுகமான லெஹேங்கா வகையான சிவப்பு நிற பட்டுடை அணிந்து புதிய போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.  இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராபர் கிரண் எடுத்துள்ளார். கவிதா குட்டா இந்த உடைகளை வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளார்.

Also Read | புதிய லேட்டஸ்ட் ஃபேஷனில் அசத்திய சமந்தா.. தீயாய் பரவும் PHOTOSHOOT ஃபோட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Ruth Prabhu Latest Photoshoot with Kiran SA

People looking for online information on Samantha, Samantha ruth prabhu will find this news story useful.