KRK TEASER: நயன்தாராவா? சமந்தாவா? காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

வலிமை படத்தில் இணைந்த தேசிய விருது வென்ற டெக்னீசியன்! யார் தெரியுமா? சம்பவம் POWER - அ இருக்கு

நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா - விஜய் சேதுபதி இணையும் படம் "காத்துவாக்குல ரெண்டு காதல்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா நடிக்கின்றனர். லலித் குமார் தயாரிப்பில் முதல் பிரதி அடிப்படையில் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கிறார். 

விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூரில் கடந்த 2020 ஆண்டு இறுதியில் தொடங்கி ஐத்ராபாத், சென்னையில் நடந்தது. பின்னர் கொரோணா காரணமாக படப்பிடிப்பு தாமதமானது.  இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் சென்ற ஆண்டு நிறைவுபெற்றது.

இந்த படத்தின் சிங்கிள் பாடல்கள் அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று முதல் லுக் போஸ்டர்  (15.11.2021) அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

 

இந்த படம் சென்ற ஆண்டு டிசம்பரில் ஒடிடி ரிலீசை தவிர்த்துவிட்டு நேரடியாக தியேட்டரிக்கல் ரிலீசாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று (11.02.2022) வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் -28, 2022 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் டீசரில் படக்குழு அறிவித்துள்ளது.

டீசரில் விஜய் சேதுபதி பேசும் வசனங்களும், முக பாவனைகளும் நகைச்சுவை சரவெடிகளை வெடிக்க வைக்கிறது. சமந்தா, நயன்தாரா இருவரிடமும் விஜய் சேதுபதி பேசும் வசனம் டீசரில் ஹைலைட்டாக அமைந்துள்ளன. பிரபு மற்றும் ரெட்டிங் கிங்க்ஸ்லி டீசரில் தோன்றியுள்ளனர். டூடூ பாடலின் பின்னணி இசை டீசர் முழுவது ஒலித்து டீசரை சிறப்பாக்கி உள்ளது.

 

தனுஷ் - இந்துஜா நடிக்கும் புதிய படத்தின் முக்கிய உரிமையை வாங்கிய முன்னணி நிறுவனம்! செம மாஸ்!

KRK TEASER: நயன்தாராவா? சமந்தாவா? காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீஸ் எப்போ? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Nayanthara VJS Kaathuvaakula Rendu Kaadhal Movie Teaser Released

People looking for online information on காத்துவாக்குல ரெண்டு காதல், சமந்தா, நயன்தாரா, Kaathuvaakula Rendu Kaadhal Movie, Nayanthara, Samantha, VJS will find this news story useful.