சமந்தா - சைதன்யாவின் திடீர் பிரிவுக்கு காரணம் இதுவா?.. கலங்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி நடிகை சமந்தா, முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

samantha naga chaitanya separation reason rumours

இவர் தெலுங்கு நடிகரும் மற்றும் நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவுடன் சில படங்களில் நடித்ததை தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு, நாக சைதன்யாவை திருமணமும் செய்து கொண்டார். பின்னர் நடிகை சமந்தா ஓ பேபி, நான் ஈ, யூ டர்ன் உள்ளிட்ட பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட படங்களில் நடித்திருந்தார்.

samantha naga chaitanya separation reason rumours

பின்னர், நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவுக்கு இடையில் உறவு சிக்கல்கள் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவந்தன. தொடக்கத்தில் இவை வதந்திகள் என்று ஒருதரப்பு  ரசிகர்கள் கூறி வந்தனர். இதனிடையே இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தங்களது பிரிவினை அறிவித்துள்ளார்கள்.

அதன்படி இருவரும் மிகவும் ஆலோசித்தபின், கணவன் மற்றும் மனைவி எனும் உறவில் இருந்து பிரிந்து, அவரவர் பாதைகளில் செல்ல செல்ல முடிவு செய்துவிட்டதாகவும், ரசிகர்களும் ஊடகங்களும் இந்த கடினமான சூழலில் ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்துக்கு உண்மையான காரணம் இதுதானா? என்பது குறித்து பல்வேறு பேச்சுகள் பேசப்பட்டு வருகின்றன. அதன்படி, இவர்களின் இந்த திடீர் முடிவின் பின்னணியில் உள்ள உண்மையான காரணம் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.

என்றாலும், குடும்பத்தை தொடங்குவது, வாழ்க்கையில் கவனம் செலுத்துவது மற்றும் எதிர்கால திட்டங்கள், அக்கினேனி குடும்பத்திற்கு வாரிசாக குழந்தை பெற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட யோசனைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, இத்தம்பதியினர் சில கருத்து வேறுபாடுகளை எதிர்கொண்டதாக ரசிகர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Also Read: அதிர்ச்சிக்குள்ளாக்கிய சமந்தா - சைதன்யா பிரிவு முடிவு.. முதல் முறை மனம் திறந்த நாகார்ஜூனா!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Samantha naga chaitanya separation reason rumours

People looking for online information on Chaitanya, Nagarjuna, Samantha, Samantha ruth prabhu will find this news story useful.