VIDEO: "சமந்தாவா இது? ரியல் ஃபைட் மூவ்..!".. தெறிக்கவிடும் தி பேமிலி மேன் 2 ஷூட்டிங் காட்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஃபேமிலி மேன் சீசன் 2 வெப் சீரிஸ் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான மதிப்பீடுகளை பெற்று வந்தாலும் 'ராஜி' வேடத்தில் நடித்ததற்கு நடிகை சமந்தா அக்கினேனி ஏராளமான கைதட்டல்களைப் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தான் தி ஃபேமிலி மேன்-2 வெப் சீரிஸீல் ரியலாகவே ஸ்டண்ட் செய்யும் சமந்தா அக்கினேனியின் வீடியோ VIRAL ஆகி வருகிறது. அதுவும் அதீத பதற்றம் கொண்ட அதிரடி காட்சிகளிலும் ஈடுபடுகிறார். பார்க்கும் நமக்கே படபடக்கிறது. சமந்தா தனது சொந்த ஸ்டண்ட் செய்ய என்ன முயற்சி எடுத்துள்ளார் என்பதை சமந்தா பகிர்ந்த இந்த வீடியோவின் மூலம் நாம் காணலாம்.

அத்துடன் தனக்கு பயிற்சியளித்ததற்காக தனது ஸ்டண்ட் இயக்குநர் யானிக் பென்னுக்கு நன்றி தெரிவித்த சமந்தா, தமது ஸ்டண்ட் காட்சிகளை பகிர்ந்துள்ளார். அப்படி ஒருவருடன் சண்டை காட்சியில் ஈடுபட்டிருந்த ஒரு சிறிய வீடியோவைப் பகிர்ந்த சமந்தா, "என் சொந்த ஸ்டண்ட் அனைத்தையும் செய்ய எனக்கு பயிற்சி அளித்ததற்காக (ஆம், அவை அனைத்தும்) என் யானிக் பென்னுக்கு ஒரு சிறப்பு சிறப்பு நன்றி. என்னைத் புஷ் செய்து என் உடலின் ஒவ்வொரு பகுதியும் வலிக்கும்போது கூட அனைத்தையும் கொடுக்க முயன்றேன். (எனக்கு வலி நிவாரணிகளுக்கு நன்றி) .. எனக்கு ஹைட் என்றால் ஒரு திடமான பயம் இருக்கிறது. ஆனால் என் பின்னால் நீங்கள் இருந்ததால் மட்டுமே நான் அந்த கட்டிடத்திலிருந்து குதித்தேன். " என குறிப்பிட்டுள்ளார்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமேசான் ப்ரைமில் வெளியான இந்த ஃபேமிலி மேன் இரண்டாவது சீசனில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா அக்கினேனி, ஷரிப் ஹாஷ்மி மற்றும் தமிழ் நடிகர்களான மைம் கோபி, ரவீந்திர விஜய் மற்றும் தேவதர்ஷினி சேதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ALSO READ: "வரலாறு அறியாதவர்களால் எடுக்கப்பட்ட தி பேமிலி மேன் தொடரை தடை செய்ய வேண்டும்!" - சீறும் பாரதிராஜா!

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Mass own fight TheFamilyManSeason2 video

People looking for online information on Amazon Prime Video, Samantha, TheFamilyManSeason2 will find this news story useful.