செம்ம ஸ்டைலிஷ் லுக்ல நடிகை சமந்தா.. வேற மாரி வைரலாகும் போட்டோ ஷூட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்,

Advertising
>
Advertising

Also Read | KGF CHAPTER 2 BOX OFFICE: ஒரே நாள்ல 100 கோடிக்கும் மேல வசூல்.. அனைத்து சாதனைகளையும் முறியடித்த ராக்கி பாய்!

விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

மேலும் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. மற்ற Cast & Crew விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிரபல தனியார் பத்திரிக்கைக்கு சமீபத்தில் நடிகை சமந்தா ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை சமீபத்தில் பகிர்ந்து இருந்தார். இந்நிலையில் இதன் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Also Read | வெந்து தணிந்தது காடு.. தலைவன் சிம்புவுக்கு வழிய விடு.. புதிய போஸ்டருடன் GVM கொடுத்த சூப்பர் Update!

செம்ம ஸ்டைலிஷ் லுக்ல நடிகை சமந்தா.. வேற மாரி வைரலாகும் போட்டோ ஷூட் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha latest photoshoot video went Viral on social media

People looking for online information on Samantha, Samantha latest photoshoot, Samantha ruth prabhu will find this news story useful.