தன் மனதுக்கு பிடித்ததை செய்துமுடிப்பதை சமந்தா எப்போதும் விரும்புவார். மாடல், நடிகை என்று வளர்ந்த அவரது கேரியர் எப்போதும் ஒரே சீராக இருக்கும்.

திருமணமான பின் பல நடிகைகள் நடிப்புக்கு குட்பை சொல்லிவிடுவார்கள். ஆனால் சமந்தா தான் மிகவும் நேசிக்கும் சினிமாவை விட்டு விலகவில்லை. மாறாக முன்பை விட, தீவிரமாக படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு என்று இருமொழிகளிலும் பிஸியாக இருக்கும் சமந்தா, கொரோனா பிரச்சனை காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்படவே, கணவர் நாக சைதன்யாவுடன் வீட்டில் குவாரண்டைன் ஆகி உள்ளார்.
அவருடைய செல்லப் நாய்க்குட்டியான Hash-உடன் விளையாடும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு மகிழ்வார். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராமில் 1 கோடி ரசிகர்கள் அவரை ஃபோலோ செய்வதை நன்றி கூறி பதிவிட்டிருந்தார்.
எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா, ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதில் அளித்தார். ரசிகர் ஒருவர் சமந்தாவின் மார்க் ஷீட்டுகளை பதிவிட்டு அவரை மனதார பாராட்டினார். சமந்தா சென்னை பல்லாவரத்திலுல்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தார். பத்தாம் வகுப்பில் அரையாண்டுத் தேர்வில் சமந்தா வாங்கிய மார்க் ஷீட்டைத்தான் அந்த ரசிகர் பதிவிட்டார்.
அதில் சமந்தா கணக்கில் நூறு மார்க் வாங்கியிருக்கிறார். எல்லா சப்ஜெக்டிலும் நல்ல மார்க் பெற்றுள்ள அவர், மொத்தமாக 88% பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரிமார்க்ஸ் பகுதியில் பள்ளி நிர்வாகம் சமந்தா பள்ளியின் மதிப்புவாய்ந்த மாணவி என்று பாராட்டியுள்ளனர்.
நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் சாம் கெட்டி என்று ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்