“இதெல்லாம் எங்க START ஆச்சுனு தெரில”.. RUMOURS குறித்து முதல் முறை மனம் திறந்த சமந்தா.. பரபரப்பு VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா, தென்னிந்தியாவின் முக்கிய நடிகையாக விளங்குபவர். இளம் நடிகையும் ஹீரோயினுமான சமந்தா தற்போது ஒரு பரபரப்பான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த வீடியோவில் சமீபத்திய வதந்திகள் தொடர்பாகவும் சமந்தா குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இந்த வீடியோவில் பேசிய சமந்தா ஹைதராபாத்திலிருந்து மும்பைக்கு இடம் மாறி செல்கிறீர்களா? என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, “நிச்சயமாக இல்லை.. ஹைதராபாத்தில் தான் இருப்பேன்.. ஹைதராபாத்தில் எனக்கு எல்லாம் கிடைக்கிறது!” என்றும் தெரிவித்திருக்கிறார்.

அண்மைக் காலமாகவே சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் இடையில் உறவு சிக்கல்கள் இருப்பதாக இணையவாசிகள் தொடர்ந்து வதந்திகளை பரப்பி வந்தனர். இதனிடையே நடிகை சமந்தா திருப்பதி கோயிலுக்கு வந்திருந்த போது அங்கும் நபர் ஒருவர் இதுகுறித்து அநாகரிகமாகக் கேட்டதற்கு எரிச்சலான சமந்தா பதிலடி கொடுத்திருந்தார்.

சமந்தா தமிழில் பாணா காத்தாடி தொடங்கி பல திரைப்படங்களில் நடித்தார். விஜய் முதலான முன்னணி நடிகர்களுடன் நடித்த சமந்தா, தெலுங்கிலும் பிரபல நடிகையாக உருவெடுத்தார். நாக சைதன்யாவுடன் தொடர்ந்து சில படங்களில் நடித்த சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, தெலுங்கில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வருகிறார்.

இதனைத் தொடர்ந்து சமந்தா ஓ பேபி, நான் ஈ, யூ டர்ன் உள்ளிட்ட பெண் மைய கதாபாத்திர கதைகளிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் தான் நாக சைதன்யா தெலுங்கில், சாய் பல்லவியுடன் இணைந்து சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம்  திரையரங்கில் நேரடியாக வெளியாகி நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் தொடர்பாக, அமீர்கான் நாக சைதன்யாவின் இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்து கொண்டபோது, இதில் சமந்தா கலந்துகொள்ளாதது, தொடக்கத்தில் சமந்தா தம் ட்விட்டர் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்று இருந்த பெயரை சமந்தா ரூத் பிரபு என மாற்றியது உள்ளிட்ட பலவற்றையும் வைத்து இணையவாசிகள் பலரும் சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்குமான உறவு குறித்து வதந்திகளை பரப்பி வந்தனர்.

இதனிடையே இது மாதிரியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, நாகார்ஜுனாவின் ட்விட்டரில் இருந்து, தமது ட்விட்டரில் பகிர்ந்த சமந்தா, “இது செம அழகு மாமா” என்று குறிப்பிட்டு அத்தனை வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இதேபோல் லவ் ஸ்டோரி திரைப்படம் தொடர்பான பேட்டிகளின் போது, தொடர்ந்து இந்த மாதிரியான பேச்சுக்கள் புண்படுத்துகிறதா? என்று கேட்டபோது, அதற்கு பதில் அளித்த நாக சைதன்யா “தொடக்கத்தில் இப்படியான வதந்திகள் கொஞ்சம் வேதனையாக இருந்தது. ஏன் இந்த பொழுதுபோக்கு தளங்கள் இப்படி செல்கிறது? என்று யோசித்தேன்.

பிறகு இது போன்ற செய்திகள் மக்களின் மனதில் அதிக நேரம் தங்காது, முக்கிய செய்திகள் மற்றும் உண்மையான செய்திகளே நிலைத்திருக்கும். இப்படியான மேலோட்டமான செய்திகளை காலப்போக்கில் மறந்து விடுவார்கள் என்பதை நான் கவனித்தேன். பின்னர்தான் இவை என்னை பாதிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில்தான் நேரலை வீடியோ ஒன்றில் ரசிகர்களுடன் உரையாடிய சமந்தா, தான் மும்பை செல்லவில்லை என்பதை குறிப்பிட்டதுடன், தனக்கு பிடித்த ஆடைகள் குறித்தும் பேசியிருந்தார். தான் நடத்தும் ஆடையக நிகழ்வு தொடர்பாக இந்த லைவ் செஷனில் சமந்தா இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வீடியோவில் பேசிய சமந்தா, தொடர்ந்து தான் மும்பை செல்வது உள்ளிட்ட வதந்தி மட்டுமல்லாமல் பல வதந்திகள் பரவுகின்றன என்றும், இவை எல்லாம் எங்கு தொடங்கியது என்றே தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். சமந்தா பேசும் முழு வீடியோ இணைப்பில் இருக்கிறது.

நடிகை சமந்தா தெலுங்கு திரைப்படமான சகுந்தலம் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். குணசேகர் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில், தேவ் மோகன், அதிதி பாலன்,  அல்லு அர்ஹா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

இதேபோல் தமிழில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தில் சமந்தா நடித்து இருக்கிறார். அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தின் ‘டூ டூ டூ’ பாடல் வெளியாகியுள்ளது. திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

“இதெல்லாம் எங்க START ஆச்சுனு தெரில”.. RUMOURS குறித்து முதல் முறை மனம் திறந்த சமந்தா.. பரபரப்பு VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha first ever video explanation over rumours

People looking for online information on Explanation marriage life rumours, Naga chaitanya, Nayanthara gossipsKalyaana Vayasunayanthara at behindwoods awardslady super starnayanthara vignesh shivanvignesh shivan livenayanthara livenayanthara interviewSAMANTHAKaathuvaakula rendu kadhalsamantha awardsamantha nayantharavignesh shivan nayanthar, Samantha, Samantha Akkineni, Samantha marriage life, Samantha Naga Chaitanya, Video will find this news story useful.