கடந்த திங்கள் அன்று, பிரபல ஆடை வடிவமைப்பாளரான நடிகை சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி மற்றும் அவரது கணவரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட்னர். அதன் பின்னர் தம்பதியர் இரண்டு வாரங்களாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர். இப்போது அவர்கள் உடல்நலம் தேறி நன்றாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஷில்பா இது குறித்து ஒரு வீடியோவைப் பகிர்ந்தார், அதில் இந்த நோயால் ஆரம்பக் கட்டத்திலிருந்து போராடி வெளியே வர ஒருவர் எவ்வாறு முயற்சி செய்யலாம் என்பதைப் பற்றி கூறியிருந்தார். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவைப் பகிர்ந்ததற்காக ஷில்பாவைப் பற்றி மிகவும் பெருமிதம் கொண்டதாக சமந்தா கூறினார். தனது இன்ஸ்டாகிராமில், "நீங்கள் இதை பதிவு செய்ய நிச்சயம் தைரியம் தேவை ஷில்பா ரெட்டி..சர்ச்சைக்கும், தூற்றுதலுக்கும் பெயர் பெற்ற நம்முடையதைப் போன்ற ஒரு சமூகத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொண்ட விதம் உண்மையில் பாராட்டப்பட வேண்டியது. நீங்கள் அனைவரையும் மிகவும் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். இது எனக்கு நிகழலாம், அது உங்களுக்கு நிகழலாம், அது யாருக்கும் ஏற்படலாம். ஆனால், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள, நாம் ஒன்றாக இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கடவுள் ஆசீர்வதிப்பார். " என்று பதிவிட்டார்.
இந்நிலையில் சமந்தாவின் மாமனார் நடிகர் நாகார்ஜுனா அகினேனி தனது ட்விட்டரில், ஷில்பா ரெட்டி இந்த நோயை எப்படி எதிர்த்துப் போராடினார் என்பதைப் பகிர்ந்துள்ளார். ஷில்பாவின் வீடியோவுடன் கூடிய இன்ஸ்டாகிராம் இணைப்பை வெளியிட்ட அவர், ஷில்பா தன் கதையை உலகத்துடன் பகிர்ந்து கொண்டதற்காகவும் பாராட்டினார்