காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து சமந்தா பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
Also Read | BREAKING: 'மாநாடு' தெலுங்கு ரீமேக்.. முக்கிய ரோலில் இரண்டு முன்னணி ஸ்டார் நடிகர்கள்!
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் அதிக கவனம் செலுத்தி நடித்துவரும் சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு சமந்தா -நாகா சைதன்யா இருவரும் பிரிவதாக சோஷியல் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த செய்தி அனைவருக்குமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. முன்னதாக புஷ்பா திரைப்படத்தில் ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். இவருடைய நடிப்பில் அண்மையில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளிவந்தது.
இந்த படத்தில் கதிஜா எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி இருவருடனும் சேர்ந்து நடித்திருந்தார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதேபோல் நடிகை சமந்தா, தி ஃபேமிலி மேன் சீரிஸிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இந்நிலையில் தான் பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் காஃபி வித் கரண் நிகழ்ச்சியின் சீசன் 7-ல் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து நடிகை சமந்தா பங்கேற்று பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளை பதில் அளித்துள்ளார். குறிப்பாக மகிழ்ச்சியில்லாத திருமணத்துக்கு காரணமே கரண் ஜோஹர் தான் என விளையாட்டாக சொன்ன சமந்தா, வாழ்க்கை K3G (கபி குஷி கபி கம்) மாதிரி நீங்கள் காட்டினீர்கள். ஆனால் வாழ்க்கை KGF (படத்தில் வரும் வாழ்க்கை) மாதிரி சவாலாக இருக்கிறது என்பது போல் பேசியிருந்தார்.
இந்நிகழ்சியில் தொடக்கத்தில் சமந்தாவை அலேக்காக தூக்கிவரும் அக்ஷய்குமாரை குறிப்பிட்டு, அவர் உங்களை பாதுகாப்புடன் தூக்கிக் கொண்டு வந்தார் என கரண் ஜோஹர் சொல்ல, நான் அது பற்றி எந்த புகாரும் சொல்லலயே? என சமந்தா சிரித்துக்கொண்டே பதில் அளித்தார். பின்னர் சமந்தா, அக்ஷய் குமாருடன் இணைந்து நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சி ஜூலை 21ம் தேதி ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | "Hurt பண்ணிட்டேன்.. இது எனக்கு ஒரு பாடம்!" - சர்ச்சை கருத்து.. ‘இரவின் நிழல்’ பிரிகிடா மன்னிப்பு.!