பிரபல நிறுவனத்துக்காக அமீர்கான் - ஆலியாபட் உடன் இணைந்த துல்கர் - சமந்தா! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நிறுவனத்துக்காக அமீர்கான் - ஆலியாபட் - சமந்தா - துல்கர் சல்மான் இணைந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | உலக அளவில் நடிகை தீபிகா படுகோனேக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

சமந்தா

சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

சென்னை பல்லாவரத்தை சார்ந்த இவர், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார்.

விவாகரத்துக்கு பின் தற்போது தமிழில் இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நாளை ரிலீசாகிறது.

ஆலியாபட்

பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரகுமானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது. கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்தார்.

ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன்  ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல Phonepe நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் நடிகை சமந்தா தோன்றியுள்ளார். மேலும் தென்னிந்தியாவில் இந்நிறுவனத்தின் விளம்பர தூதுவர்களாக துல்கர் சல்மானும், சமந்தாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தி மொழியில் அமீர்கானும், ஆலியாபட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். நால்வரும் தனித்தனியாக இந்நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்து, அந்த 4 விளம்பரமும் வெளியாகி வைரலாகி உள்ளது.

 

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

பிரபல நிறுவனத்துக்காக அமீர்கான் - ஆலியாபட் உடன் இணைந்த துல்கர் - சமந்தா! முழு தகவல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Samantha Alia Bhatt Phonepe New Ad Video Goes Viral

People looking for online information on Alia Bhatt, Phonepe, Phonepe New Ad Video, Samantha, Samantha Phonepe New Ad video will find this news story useful.