''ஓ! பேபி - வழக்கமான என்ஜாய்மென்ட் இருக்காது'' - என்னவா இருக்கும் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமந்தா நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி வெளியாகியிருந்தது. இந்த படத்தில் தியாகராஜன் குமாரராஜா இயக்க, விஜய் சேதுபதி, மிஷ்கின், பஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இதனையடுத்து சமந்தா 'ஓ பேபி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார். மேலும், நாக சூர்யா, லக்ஷ்மி, ஊர்வசி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்துக்கு மிக்கி ஜே. மேயர் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படம் குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை அவர் எழுதியுள்ளார். அதில், திரையுலகில் 55 வருடங்களை நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள் சுரேஷ் புரொடக்ஷன். அவர்களின் அடுத்த படத்தில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. 

இதன் மூலம் ஓ பேபியில் இருந்து ஸ்வாதியை அறிமுகம் செய்கிறேன். வழக்கமான என்ஜாய்மென்ட் இருக்காது . என்று குறிப்பிட்டுள்ளார்.

Samantha Akkineni introduced her Character in Oh Baby

People looking for online information on Micky J Mayor, Oh Baby, Samantha ruth prabhu will find this news story useful.