VIDEO: சவால் விட்ட பாலிவுட் நடிகர்.. களத்தில் குதித்து பட்டையை கிளப்பிய சமந்தா..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஜஸ்ட் மிஸ், இல்லன்னா என்ன ஆகியிருக்கும்? லட்சுமியால் தப்பித்த பாரதி.. துடித்த குடும்பத்தினர்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களில், சமந்தாவின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

'பேமிலி மேன் 2' வெப் சீரியஸில், இதுவரை யாரும் பார்த்திராத காதாபாத்திரத்தில் தோன்றி, ஒட்டுமொத்த பாராட்டினையும் பெற்றிருந்தார் சமந்தா.

நயன்தாரா - சமந்தா

சமீபத்தில், புஷ்பா படத்தில் ஒரே பாடலில் சமந்தா போட்டிருந்த ஆட்டம், ஒட்டுமொத்த இந்திய திரையுலகின் கவனத்தையும் பெற்றிருந்தது. தமிழில் அடுத்ததாக 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி, இத்திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'அட்டாக் சேலஞ்ச்' ட்ரெண்டிங்

இதனைத் தொடர்ந்து, தெலுங்கில் யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்களில் நடிகை சமந்தா கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, 'அட்டாக் சேலஞ்ச்' தொடர்பாக சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஹிந்தியில், ஜான் ஆப்ரஹாம், ஜாக்குலின் பெர்னாண்டஸ், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்த 'அட்டாக்' என்னும் திரைப்படம், ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

புதிய வொர்க் அவுட் வீடியோ

இதனைக் குறிப்பிட்டு, நடிகை ரகுல் ப்ரீத் சிங், வொர்க் அவுட் மற்றும் அதிக பழு தூக்கும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, நடிகர் டைகர் ஷெராப்புக்கு சவால் விட்டார். தொடர்ந்து, ரகுல் ப்ரீத்தின் சவாலை ஏற்றுக் கொண்ட அவர், வொர்க் அவுட் வீடியோவை வெளியிட்டு நிறைவேற்றி, சமந்தாவுக்கு தன்னுடைய சவாலை திருப்பி விட்டார்.

அதிகம் மெனக்கெடல்

இதனை ஏற்றுக் கொண்ட நடிகை சமந்தா, ஜிம்மில் கடினமாக பழு தூக்கும் வீடியோவை வெளியிட்டு, அடுத்ததாக நடிகர் அர்ஜுன் கபூருக்கு சவால் செய்துள்ளார். சமீப காலமாகவே, நடிகை சமந்தா சினிமாவில் தீவிரமாக இருப்பது போல, ஜிம்மிலும் அதிக நேரத்தை செலவிட்டு மிக கடினமாக வொர்க் அவுட் செய்து வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், இந்த அட்டாக் சேலஞ்ச் வீடியோவும், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

கதிர் - முல்லை விஷயத்தில்.. மூர்த்தி எடுக்கப் போகும் முடிவு.. பரபரப்பில் Pandian Stores குடும்பத்தினர்

 

தொடர்புடைய இணைப்புகள்

Samantha accepts tiger shroff attack challenge

People looking for online information on அட்டாக் சேலஞ்ச், சமந்தா, Samantha, Tiger shroff attack challenge will find this news story useful.