இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் லேட்டஸ்ட் புரோமோ வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழைப் போலவே பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. தெலுங்கில் சீசன் 4 நிகழச்சியின் டைட்டில் டீஸர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிகழ்ச்சியை நாகர்ஜூனா தொகுத்து வழங்குகிறார். அவர் பங்கேற்ற புரோமோ வீடியோ படப்பிடிப்பு புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் நடிகர் சல்மான் கான் பங்கேற்கும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

வீடியோவில் விவசாயம் செய்யும் சல்மான் கான், மாற்றம் வேண்டும் என்று கூறுகிறார். பின்னர் விறுவிறுவென தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டு தனது ஸ்டைலில் பிக்பாஸ் அறிவிப்பை வெளியிடுகிறார். ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் மாத இறுதியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Salman Khan's Bigg Boss 14 promo video goes viral | இணையத்தில் வைரலாகும் சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரோமோ

People looking for online information on Bigg boss, Salman Khan will find this news story useful.