சல்மான் கான் & பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படம்.. படத்தின் பெயரை மாற்றிய படக்குழு! மாஸ் டீஸர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சல்மான் கான் & பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படத்தின் புது தலைப்பு டீஸருடன் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்.. OTT உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! சூப்பர் தகவல்

அல்லு அர்ஜுன், பிரபாஸ், விஜய் மற்றும் ராம் சரண் உள்ளிட்ட தென்னிந்திய நடிகர்களுடன் நடித்த பிறகு, பூஜா ஹெக்டே இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் நடிக்க தயாராகி வருகிறார்.

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'சர்க்கஸ்' படத்திலும் பூஜா நடிக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் கிறிஸ்மஸ் வெளியீடாக வர உள்ளது. அடுத்து மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக 'SSMB28' படத்திலும் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

தனது அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.    முதலில் இந்த படத்திற்கு கானின் 'கபி ஈத் கபி தீபாவளி' எனப் பெயரிடப்பட்டு படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள வைல் பார்லேயில் தொடங்கியது. இதில் பூஜா ஹெக்டே சல்மான் கான் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு டிசம்பரில் இந்த படம் ரிலீசாக உள்ளது. சல்மான் மற்றும் பூஜா தவிர, ஆயுஷ் சர்மா மற்றும் ஜாகீர் இக்பால் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் மூலம் வெங்கடேஷ் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டில் லுக் டீஸர் வெளியாகி உள்ளது.

பர்ஹத் சம்ஜி இந்த படத்தினை இயக்கி வருகிறார். கோயம்புத்தூரை சார்ந்த மணிகண்டன் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு 'Kisi Ka Bhai Kisi Ki Jaan' என புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Also Read | "ஆசான் அஜித்குமார்".. AK-க்கு ஆசிரியர் தின வாழ்த்து சொன்ன பிரபல AK61 பட நடிகர்! வைரல் ட்வீட்

சல்மான் கான் & பூஜா ஹெக்டே நடிக்கும் புதிய படம்.. படத்தின் பெயரை மாற்றிய படக்குழு! மாஸ் டீஸர் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Salman Khan Pooja Hegde Kisi Ka Bhai Kisi Ki Jaan title announcement

People looking for online information on Kisi Ka Bhai Kisi Ki Jaan, Pooja Hegde, Salman Khan will find this news story useful.