சல்மான் கானை தீண்டிய பாம்பு! பர்த்டேவுக்கு முதல் நாள் பண்ணை வீட்டில் பரபரப்பு! நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கானை அவரது பண்ணை வீட்டில் வைத்து பாம்பு கடித்த விஷயம் பரபரப்பாகியுள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் சல்மான் கான் (Salman Khan):

பாலிவுட் என்று சொல்லப்படும் இந்தி திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக  சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சல்மான் கானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர்.

இதனிடையே ஷாரூக்கான் நடிக்கும் பதான் என்ற திரைப்படத்தில், நடிகர் சல்மான் கான் கவுரவ தோற்றத்தில் இடம்பெறவுள்ளார்.

இந்தி பிக்பாஸ்:

தமிழில் நடிகர் கமல்ஹாசன் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதைப் போன்று, சல்மான் கான் இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தின் விளம்பரத்திற்காக அந்த படத்தில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், இயக்குனர் ராஜமவுலி ஆகியோரை வைத்து, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் நடத்தினார்.

பிறந்த நாளை முன்னிட்டு..

இப்படி திரைப்படம், சின்னத்திரை ரியாலிட்டி ஷோ என பிஸியாக இருக்கும் சல்மான் கான், தமது பிறந்த நாளை கழிக்க மகாராஷ்டிரா ராய்கட் மாவட்டத்தில் பன்வேல் என்கிற இடத்தில் உள்ள தமது பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார்.

முன்னதாக இந்த கொரோனா காலத்தில் இந்த வீட்டில் இருந்து கொண்டுதான், விவசாய, தோட்டப் பணிகளை சல்மான் கான் மேற்கொண்டிருந்தார். இவை தொடர்பான வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வந்தன.

பண்ணை வீட்டில் வைத்து கடித்த பாம்பு:

இந்த நிலையில் தான், சல்மான் கானை, நள்ளிரவு 3 மணிக்கு அவரது அந்த பண்ணை வீட்டில் வைத்து பாம்பு ஒன்று, கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து உடனடியாக மும்பையில் இருக்கும் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சல்மான் கானுக்கு, மருந்து கொடுத்து மருத்துவர்கள், தீவிர சிகிச்சை வழங்கினர். மேலும் அவரை விஷமற்ற பாம்பு தீண்டியதாகவும் கூறப்படுகிறது. 

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்:

அதன் பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். டிசம்பர் 27-ஆம் தேதி அவர் தன் 56வது பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில், பிறந்த தினத்துக்கு முதல் நாள் அவரை பாம்பு கடித்ததால் அவரது ரசிகர்கள் பதட்டம் ஆகிவிட்டனர். இந்நிலையில், தான் நலமாக இருப்பதாக நடிகர் சல்மான் கானே, தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read: போடு! நம்ம BiggBoss கேபியா இது? பிரபல விஜய் டிவி சீரியலில் மாஸ் எண்ட்ரி! அசத்தலான promo!

தொடர்புடைய இணைப்புகள்

Salman Khan gets bitten by snake Panvel farmhouse BiggBoss15

People looking for online information on Bigg Boss 15, BiggBoss15, Karan Kundrra, Salman Khan, Salman Khan BiggBoss15, Salman Khan gets bitten by snake, Salman Khan Hospital, Salman Khan in treatment, Salman Khan Snake, Tejasswi Prakash will find this news story useful.