சீனா- இந்தியா ராணுவ வீரர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்அலி கடந்த ஜூன் 16-ம் தேதி லடாக்கில் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனையடுத்து இந்திய அரசு அத்துமீறித் தாக்கிய சீன அரசை கண்டித்து அதன் பொருட்களைப் புறக்கணிக்க வலியுறுத்தியது.
இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சீன செயலிகள் சிலவற்றையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வால் தான் பயன்படுத்திவந்த சீன செயலியான டிக் டாக்கிலிருந்து வெளியேறினார்.
இது குறித்து நடிகை சாக்ஷி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பது, 'பொறுமைக்கும் அமைதிக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவது நம் நாடு. ஆனால் சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்தி நம் நிலத்தை அபகரிக்க முயல்கிறது. எனவே நான் இனிமேல் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்தப் போவதில்லை என்றும், சீனத் தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளேன். மற்றவர்களும் இதைப் பின்பற்ற நான் முயற்சிகளை மேற்கொள்வேன். 218k Followers and 1M+ Hearts உள்ள டிக்டாக்கிலிருந்தும் நான் வெளியேறுகிறேன்.
என்னைப் பொறுத்தவரை, எனது நாடுதான் எனக்கு எதிலும் முதன்மையாக தோன்றும். என் நாட்டின் கண்ணியத்தைக் காக்க ஒரு குடிமகளாக செய்ய வேண்டியதைச் செய்ய நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்" என்று கூறினார் சாக்ஷி.
சாக்ஷியின் முடிவை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் மனதார பாராட்டி வருகின்றனர். அவரைப் பின் தொடர்ந்து சில ரசிகர்களும் டிக் டாக்கிலிருந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது