சினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் - சாய் பல்லவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் பாலா சிங், பொன்வண்ணன், உமா பத்மநாபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல் படத்தொகுப்பும் கவனித்துள்ளனர்.

அனல் பறக்கும் வித்தியாசமான அரசியல் கதைக்களத்தில், செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் சமிபத்தில்‘என்.ஜி.கே’ பற்றி  பேசிய சாய் பல்லவி “முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும் என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிக கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாக படப்பிடிப்பு தளங்களில் செல்போன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றி பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்பு தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன? என்று அங்குதான் கற்றுக் கொண்டேன்.

மேலும், படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாளே அந்த காட்சிக்கு தேவையான வசங்களை முன்பே வாங்கி வீட்டில் பயிற்சி எடுத்து கொண்டு வருவோம். ஆனால், படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு அவர் சொல்வதைக் கேட்டு நடித்தால் தான் சரியாக இருக்கும். ஒரு வசனத்திற்கு எப்படி முகபாவனை செய்ய வேண்டும்? எப்படி அழ வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுப்பார். அதுமட்டுமில்லாமல் கோபப்பட்டு நடிக்கும் காட்சிகளில் கூட மூச்சுவிடுவது வெளியே தெரியக்கூடாது என்று கூறுவார். அவர் நினைக்கும் நடிப்பு நம்மிடம் வரும்வரை விடமாட்டார்.

நடிப்பு என்றால் என்ன? என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேனோ அதெல்லாம் முற்றிலும் தவறாகிவிட்டது. ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் நினைத்த மாதிரி நடிப்பு வரவில்லை, நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டார். அன்று இரவு எனக்கு நடிப்பு வரவில்லை மருத்துவராகவே இருந்து விடுகிறேன் என்று என் அம்மாவிடம் கூறிவிட்டேன். அன்று முழுவதும் அழுதுக் கொண்டே இருந்தேன். ஆனால் மறுநாள் ஒரே ‘டேக்’கில் அவர் நினைத்தது வந்துவிட்டது என்று கூறிவிட்டார். அதை நம்பாமல் என் அம்மா உங்களிடம் பேசினார்களா? என்று செல்வராகவனிடம் கேட்டேன், அதற்கு அவர் இல்லை நான் கேட்டது கிடைத்துவிட்டது என்று கூறினார்" என்றார் சாய் பல்லவி.

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi speaks about working with Selvaraghavan in NGK

People looking for online information on Dream Warrior Pictures, Rakul Preet Singh, Sai Pallavi, Selvaraghavan, Suriya, Yuvan Shankar Raja will find this news story useful.