ஹீரோயினாக அறிமுகமாகும் நடிகை சாய் பல்லவியின் தங்கை... கூட யார் நடிக்கிறாங்க பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக ஸ்டண்ட் சில்வா பணியாற்றியுள்ளார்.இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாக இருக்கிறாராம். இந்தப் படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ஸ்டண்ட் சில்வா இருவருமே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் விஜய் கவனித்துக் கொள்ள இருக்கிறாராம். தமிழ் சினிமாவின் முக்கிய கலைஞர்கள் ஒன்று சேரும் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதில் பூஜா கண்ணன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இவர் நடிகை சாய் பல்லவியின் சொந்த தங்கையாவார். மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி. அவரது நடிப்பும் நடனமும் ரசிகர்களை கட்டிப் போட்டது. அதன் பிறகு தற்போது தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் தனுஷின் மாரி, தியா, NGK, பாவக் கதைகள் போன்ற படங்களில் நடித்திருந்தார்.இந்நிலையில் பூஜா கண்ணனும் தமிழ் சினிமாவில் முன்னணி இடத்திற்கு வருவாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய இணைப்புகள்

Sai pallavi sister to be introduced as heroine நடிகையாவும் சாய் பல்லவியின் தங்கை

People looking for online information on Pooja Kannan, Sai Pallavi will find this news story useful.