சாய்பல்லவியின் BTS மேக்கப் வீடியோ! பாக்குற நமக்கே கஸ்டமா இருக்கே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: சாய்பல்லவியின் SSR பட கெட்டப் மேக்கப் BTS வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது

Sai Pallavi Shyam Singha Roy BTS Video went Viral
Advertising
>
Advertising

நானி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கும் படமான SSR ஷியாம் சின்ஹா ராய். 'ஷ்யாம் ஷிங்கா ராய்' படத்தை ராகுல் சாங்கிருத்தியன் இயக்கியுள்ளார். விஸ்வரூபம் படத்தின் ஒளிப்பதிவாளர் சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் மிக்கி ஜே மேயர் இசையமைத்துள்ளார். தேசிய விருதுப்பெற்ற 'ஜெர்சி' பட எடிட்டர் நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார்.

Sai Pallavi Shyam Singha Roy BTS Video went Viral

சூப்பர் நேச்சுரல் திரில்லர் வகைமையில் இந்த திரைப்படம் உருவானது. கொல்கத்தா நகரை மையமாக வைத்து இந்தப் படம் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  கடந்த ஜென்ம ஞாபகத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் அமைந்துள்ளது, நானி இரு வேடங்களில் நடிக்க, நடிகையாக கீரித்தி ஷெட்டியும், தேவதாசியாக, காதலியாக சாய்பல்லவியும் நடித்துள்ளனர், மடோனா செபாஸ்டியனும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

மேக்கப் இல்லாத கீர்த்தி சுரேஷ்.. பார்த்து இருக்கீங்களா.. புகைப்படம் உள்ளே

 

இந்த படம் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் இந்த படம் வெளியானது.  இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி இள வயது தேவதாசியாகவும், முதிய பெண்மணியாகவும் நடித்து இருந்தார். இந்த படத்தில் முதிய பெண் வேடத்திற்கு சாய் பல்லவி மேக்கப் போடும் BTS வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வெளியானவுடன், இந்த படத்திற்காக சாய்பல்லவியின் டெடிக்கேஷன் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாவ்.. ஜி.வி.பிரகாஷின் "பேச்சுலர்".. பிரபல ஓடிடி-யில் வருது.. எப்போ? எதுல?

 

இந்த வீடியோவை ப்ரித்திசெல் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். Life Cast Process என்று குறிப்பிட்டு சாய்பல்லவி இதற்கு பொறுமையாக ஒத்துழைப்பு நல்கியதாகவும் தெரிவ்த்துள்ளார். டா மேக்கப் லேப்பில் இதற்கான பணிகள் நடந்தது. இந்த டா மேக்கப் குழுவினரே தேசிய விருது பெற்றவர்கள், மேலும் பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி படங்களுக்கு பணியாற்றியவர்கள்.

 

சாய்பல்லவியின் BTS மேக்கப் வீடியோ! பாக்குற நமக்கே கஸ்டமா இருக்கே! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Shyam Singha Roy BTS Video went Viral

People looking for online information on சாய்பல்லவி, ஷ்யாம் ஷிங்கா ராய், Sai Pallavi, Shyam Singha Roy will find this news story useful.