LATEST: சாய் பல்லவி, நாக சைதன்யா நடிக்கும் "லவ் ஸ்டோரி" படத்தின் ரசிக்க வைக்கும் டிரெய்லர்! DON'T MISS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான சேகர் கம்முலா இயக்கியுள்ள படம் லவ் ஸ்டோரி.

இந்தப் படத்தில்  நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் பாடல்களும் டீசரும் போஸ்டரும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக சாரங்க தரியா பாடல் தெலுங்கு ரசிகர்களை தாண்டி இந்தியா முழுவதும் ஹிட்டடித்தது. இந்த பாட்டில் சாய் பல்லவி நடனம் பெரியளவில் பேசப்பட்டது.

சாய் பல்லவி ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ரொமன்டிக் டிராமா வகைமையில் இந்த படம் உருவாகி உள்ளது. 

இந்நிலையில் கொரோணா காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் வெளியீடு  செப்டெம்பர் மாதம் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு திரையரங்கில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்தது. ஆனால் திட்டமிட்டபடி படம் தியேட்டரில் வெளியாகவில்லை, இதனால் வெளியீட்டு தேதியை மீண்டும் செப்டெம்பர் மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தது படக்குழு.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை இன்று(13.09.2021) படக்குழு வெளியிட்டுள்ளது.  படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தக்கவைத்துள்ளது. இந்த படத்தில் ரேவந்த் என்ற பாத்திரத்தில் நாக சைதன்யாவும், மவுனிகா என்ற பாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். கிராமத்தில் இருந்து நகரத்தில் முடியும் கதைக்களத்துடன் லவ் ஸ்டோரி படம் உருவாகியுள்ளது.

இந்த படத்திற்காக நாக சைதன்யாவிற்கு சேகர் கம்முலா நடிப்பு ஒத்திகை நடத்தி பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

LATEST: சாய் பல்லவி, நாக சைதன்யா நடிக்கும் "லவ் ஸ்டோரி" படத்தின் ரசிக்க வைக்கும் டிரெய்லர்! DON'T MISS! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Sai pallavi love story movie trailer released with new poster

People looking for online information on Naga chaitanya, Sai Pallavi will find this news story useful.