இது வேற லெவல்! பெங்காலி மொழியில் சாய் பல்லவி நடித்த தமிழ்ப்படம்.. சூப்பர் சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பெங்காலி மொழியில் சாய் பல்லவி நடித்த கார்கி படம் வெளியாக உள்ளது.

Sai Pallavi Gargi Movie Releasing in Bengali Language
Advertising
>
Advertising

நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சாய்பல்லவி நடித்த ’கார்கி’ படத்தை கௌதம் ராமச்சந்திரன் இயக்கியுள்ளார். 96 படப்புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Sai Pallavi Gargi Movie Releasing in Bengali Language

கார்கி படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை சக்தி ஃபிலிம் பேக்டரி கைப்பற்றியது. இந்த படத்தினை சூர்யா ஜோதிகா தம்பதியர் தங்களது 2டி நிறுவனம் மூலம் வழங்கினர்.

கடந்த ஜூலை 15 ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பள்ளி ஆசிரியராக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் காளி வெங்கட், சரவணன், ஐஸ்வர்யா லெஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஒடிடி  ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனமான சோனி லிவ் கைப்பற்றி உள்ளது. நாளை ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் கார்கி திரைப்படம் சோனி லிவ் தளத்தில் ஒளிபரப்பாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, இந்தி மொழியில்  வெளியாகி உள்ளது

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallavi Gargi Movie Releasing in Bengali Language

People looking for online information on GARGI, Sai Pallavi, Sony LIV will find this news story useful.