"அப்பவே அப்படியா?".. தங்கை நடித்த படம் ரிலீஸ்.. வாழ்த்து சொல்லி சாய் பல்லவி ஜாலி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரேமம், மாரி-2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களைம் குறிப்பாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி.

Advertising
>
Advertising

இவரது தங்கை தான் பூஜா கண்ணன். நடிகை பூஜா கண்ணன் தற்போது சித்திரை செவ்வானம் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது இந்த திரைப்படம்.

அப்பா - மகள் பாசத்தை மையமாகக் கொண்ட க்ரைம் த்ரில்லர் படமான இந்த படத்துக்கு இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பேபி மானஸ்வி, ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு சாம் CS இசையமைப்பாளராகவும், பிரவீன் KL படத் தொகுப்பாளராகவும்,  மனோஜ் பரமஹம்சா மற்றும்  K.G.வெங்கடேஷ்  ஒளிப்பதிவாளர்களாகவும் பணிப்புரிந்துள்ளனர். பிரபல இயக்குனர் விஜய் இப்படத்தை எழுதி வெளியிட்டுள்ளார். A.L.அழகப்பன் மற்றும் P.மங்கையர்க்கரசி இனணந்து தயாரித்துள்ளனர். 

இந்நிலையில், தன் தங்கை பூஜா கண்ணனின் இப்படம் மற்றும் நடிப்பு குறித்து நெகிழ்ந்து, நடிகை சாய் பல்லவி தமது இன்ஸ் டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “இன்று எனக்கு மிகவும் சிறப்பான நாள், ஏனென்றால் நான் மட்டுமே அறிந்தவளை உலகம் காணுகிறது. உடல்நிலை சரியில்லாமல் இருப்பது போல, அம்மா அப்பாவை ஏமாற்றி வகுப்புகளுக்கு பங்க் செய்தவளை பார்த்திருக்கிறேன். மனச்சோர்வடைந்த நாட்களிலும் பட்டாசாய் வெடித்தவளையும் பார்த்திருக்கிறேன். இப்போது நடிகையாக (திரைக்கு வெளியேயும் கூட) வளர்வதை நான் பார்க்கிறேன்.

இன்று, "சித்திரை செவ்வானம்" (Zee5-ல்) படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.!!! நீங்கள் அனைவரும் அதைப் பார்த்து உங்கள் அன்பை அவளுக்கு வழங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் ♥️ இயக்குனராக அறிமுகமாகும் சில்வா மாஸ்டர், இயக்குனர்/தயாரிப்பாளர் விஜய் சார், சமுத்திரக்கனி சார், ரீமா கல்லிங்கல் மேடம், குழந்தை மானஸ்வி மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேலும் இது உனக்காக பூஜூ, ஒரு கேரக்டரில் நடிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியைப் போலவே பார்வையாளர்கள் பொழியும் அன்பும் போதை தரும். நீ இந்தப் பயணத்தை அனுபவித்து, உன்னை சுற்றி பாசிடிவிட்டியை சேர்த்துக்கொண்டு ஒவ்வொரு அனுபவத்திலும் சிறந்த நபராக மாற நான் பிரார்த்திக்கிறேன்.

உன்னை நேசிக்கிறேன், எப்போதும் பாதுகாப்பேன் ♥️ ஃப்ளை ஹை மை லில் ஒன் ♥️ உன் பெருமைமிக்க சகோதரி, சாய் பல்லவி” என்று நடிகை சாய் பல்லவி குறிபிட்டுள்ளார். முன்னதாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி, ‘தியா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஏ.எல்.விஜய் கதை மற்றும் தயாரிப்பில், நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Sai Pallaivi post wishing pooja kannan chiththirai sevvaanam

People looking for online information on A L Vijay, Chithirai Sevvaanam, Manasvi, Pooja Kannan, Sai Pallavi, Samuthirakani, Stunt silva, Zee5 will find this news story useful.