பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவ்வப்போது ஏராளமான நடிகர், நடிகைகளும் மாறி வருகிறார்கள். முல்லை கதாபாத்திரத்தில் இதுவரை மூன்று நடிகைகள் மாறிவிட்ட சூழலில், கடைசி சகோதரராக வரும் கண்ணனின் மனைவியாக நடித்துவந்த நடிகை சாய் காயத்ரி, இந்த சீரியலில் இருந்து அண்மையில் விலகினார். இதனால் தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஏற்கனவே விஜே தீபிகா நடிக்கிறார்.
இந்நிலையில், தான் விலகியது குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலில் பேசிய நடிகை சாய் காயத்ரி, “பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையைப் பொறுத்தவரை இந்த மாதிரி தான் கதை போகும், ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் கிராஃபில் ஒரு தடுமாற்றம் அல்லது ஏற்ற இறக்கம் இருக்கும், அவர் வீட்டை விட்டு வெளியே சென்று, பிறகு பலரால் புத்தி சொல்லப்பட்டு, பின்னர் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக இருப்பார் என்று முன்கூட்டியே சொல்லியிருந்தால் நான் இதை செய்துதான் இருக்க வேண்டும். ஆனால் இந்த கேரக்டரில் ஏற்பட்ட திடீர் மாற்றம் கதைக்கு தேவைப்பட்டது.
சீரியல்களில் கதை என்பது ஆர்டிஸ்ட் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. அல்லது இயக்குனர் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. அதில் ஆர்டிஸ்ட், இயக்குனர், சேனல், தயாரிப்பாளர் என பலரும் சம்பந்தப்படுகிறார்கள். நடிக்கக்கூடிய ஆர்டிஸ்ட்கள் எந்த கேரக்டர் நடித்தாலும் நடித்து விடுவார்கள். அதேசமயம் அது நமக்கு இயல்பாக வரவேண்டும். அது திணிப்பதால் நமக்கு செயற்கையாக வரும். நடிக்கும்போது நமக்கே திருப்தி இல்லை என்றால், பார்க்கும் பார்வையாளருக்கு அது நன்றாக தெரிந்து விடும்.
ஏனென்றால் நான் ஒரு மாற்றப்பட்ட கதாபாத்திரத்திற்கு நடிக்க வந்தேன். இந்த கேரக்டர் திடீரென அம்பி, திடீரென ரெமோ, அந்நியன் என மாறி மாறி வந்தது, அது எனக்கு சௌகரியமாக இல்லை. இப்படியான கேரக்டர் பார்வையாளுருடன் கனெக்ட் ஆவது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. மற்ற கேரக்டர்கள் அப்படி பண்ணும் பொழுது மக்கள் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நான் என்னுடைய கேரக்டருக்கு ரயில் பெட்டி போல், நூல் பிடித்தது போல் என்னால் முடிந்ததை செய்து கொண்டிருந்தேன். சில காட்சிகளில் கதாபாத்திரத்தை வேறு மாதிரி மாற்றிக் கொண்டு நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் அவற்றில் கூட நான் சிரித்துக் கொண்டே நக்கலாக நடித்திருக்கிறேன். ஆனால் அவற்றை அப்படி செய்யக்கூடாது; அது ஜாலியாக தன் பாட்டுக்கும் பேசிவிட்டு போகக்கூடிய கேரக்டர். அதில் நான் அந்த கேரக்டரின் தன்மையை மாற்றி செய்ய வேண்டி இருந்ததுதான் அதற்கு காரணம்.
இனி வரக்கூடிய கதைகளில் நான் அதை அப்படி மாற்றி நடித்தால் இயக்குனரை திட்ட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் எனக்கு என்னுடைய இயக்குனரை மிகவும் பிடிக்கும். அந்த மாதிரி இயக்குனர் கிடைத்ததற்கு நான் தவம் இருந்து இருக்கிறேன். சிரித்த முகத்துடன் வருவார். எங்களுடைய அட்ராசிட்டிகளை பொறுத்துக் கொள்வார். ஆகையால் ஒரு ஆர்ட்டிஸ்டாக நான் தொடர்ந்து இப்படி நடிக்கும் பொழுது அங்கு பணிபுரி மற்ற அனைவரின் உழைப்பையும் பாதிக்கும் என்று நினைத்தேன். அதே சமயம் கதையை மாற்ற சொல்ல கூடிய உரிமை எனக்கு இல்லை; கதாபாத்திரத்தை ஏன் மாற்றினீர்கள் என்று வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் அதற்கான உரிய காரணம் இருக்கும் பொழுது, அந்த முடிவு சேனலுடைய முடிவு எனும்போது இது பற்றி நான் எதுவும் கேட்கவில்லை.
ஏனெனில் இந்த கதையை வைத்துதான் ஒரு கல்யாண வீடு Play உருவாக்குகிறார்கள் எனும் பொழுது என்னுடைய கேரக்டரை மட்டும் மாற்ற சொல்லி நான் கேட்க முடியாது, மற்றவர்களின் கேரக்டர்களும் அதில் அடங்கியிருக்கிறது. எனக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரும் குடும்பத்தினர் போன்றவர்கள். அந்த சீரியலை விட்டு வெளியே வரும் போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். அப்படி ஒரு செட் அது. ஆனால் என்னுடைய தொழிலுக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும், எனக்கு பிடித்ததை நான் செய்ய வேண்டும், அவர்கள் தப்பா நினைத்து விடுவார்களோ.. இவர்கள் இப்படி நினைத்து விடுவார்களோ.. என்று நினைத்து யோசிப்பேன் நான்.! இருப்பினும் இது ஒரு இக்கட்டான சூழ்நிலையாகவே இருந்தது” என பேசியுள்ளார்.