VIDEO: ஃபைட் சீனில் பல்டி அடித்து பட்டையை கிளப்பிய 'சாய் தன்ஷிகா'!.. வாயைப் பிளக்க வைக்கும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கத்தில் நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’.

சாய் தன்ஷிகாவுடன் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் வகையிலான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கின்றன. அதன் ஒரு காட்சிக்கான படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சாய் தன்ஷிகா தன்னுடைய சமூக வலைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் சாய் தன்ஷிகா பாதுகாப்பு கயிறுகளுடன் அந்தரத்தில் இருந்து பல்டி அடிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு துணிச்சலும் தன்னம்பிக்கையும் முக்கியம் என்பதை வலியுறுத்தி ஊக்குவிக்கும் வகையில் இதை மகளிர் தினத்தன்று பகிர்ந்த தன்ஷிகா, பெண்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆண்களும் மறக்கமுடியாதவர்கள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் சண்டைப்பயிற்சி மாஸ்டர் கணேஷ்  மற்றும் டிரெய்னர் யோகராஜ்குமார் மற்றும் குழுவினரையும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ALSO READ: "நண்பர்களே.. அந்த நேர்காணலில்..".. ராமசாமி சர்ச்சை.. 'மன்னிப்பு' கேட்டு செல்வராகவன் விளக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Sai dhanshika Viral acrobatics Yogi da Trending சாய் தன்ஷிகா

People looking for online information on Sai Dhansika, Trending, Video, Viral will find this news story useful.