ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் செவிந்தியர்களின் உரிமைக்குரலாக ஒலித்த செவ்விந்திய நாயகி நேற்றிரவு காலமானார்
ஆனால் தி காட்ஃபாதர் படத்துக்காக தனக்கு வழங்கப்பட்ட ஆஸ்கர் விருதை நடிகர் மார்லன் பிராண்டோ புறக்கணித்தபோது, அந்த பிரதிநிதியாக விருது வழங்கும் விழாவில் மேடையேறி கர்ஜித்தவர் சச்சின் லிட்டில் ஃபெதர். தமிழில் வெளியான சாமானியன் டூ தாதா படங்களின் முன்னோடி படமாக 1970 களில் ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகி, ஹிட் அடித்த படம் ‘தி காட்ஃபாதர்’.
ஒரு சாமானியன் மிகப்பெரிய தாதாவாக மாறும் என்கிற சுவாரஸ்ய ஒன்லைனை கொண்ட தி காட் ஃபாதர் படத்தில் நாயகன் மார்லன் பிராண்டோ நடித்ததற்காக, 1973 ஆண்டு, கதாநாயகன் மார்லன் பிராண்டோவுக்கு சிறந்த நடிகர் விருது உட்பட இந்த படத்துக்கு 3 ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் இந்த விருது விழாவில், மார்லன் பிராண்டோவை அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்க, அவர் பெயரை அறிவித்ததும், அவருக்கு பதில், ஒரு செவ்விந்திய பெண் மேடையில் ஏறி வந்தார். அவர்தான் சச்சின் லிட்டில் ஃபெதர ஆம், செவ்விந்தியப் பாரம்பரிய உடையுடன் ஆஸ்கர் மேடையேறிய சச்சின் லிட்டில் ஃபெதர், மார்லன் பிராண்டோவுக்கு பதில் விருதினை பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாறாக, ஹாலிவுட்டில் தங்கள் இனம் புறக்கணிக்கப்படுவதாகவும், அதனால் விருதை நடிகர் மார்லன் பிராண்டோ விருதை ஏற்க மறுப்பதாகவும், அவருடைய பிரதிநிதியாகவே தான் ஏறியதாகவும், தன் கையில் இருந்த மார்லன் பிராண்டோவின் கடிதத்தின் ஒரு பகுதியை படித்துக் காட்டினார்.
எனினும் அடுத்த 50 ஆண்டுகள் கழித்து இதற்கு மன்னிப்பு சச்சின் லிட்டில் ஃபெதரிடம் ஆஸ்கர் கமிட்டி, மன்னிப்பு கேட்டதை சிலர் எதிர்த்தாலும் பலர் ஆமோதித்தனர். இப்படி மார்லன் பிராண்டோவின் ஆஸ்கர் விருது புறக்கணிப்பு என்றாலே சச்சின் லிட்டில் ஃபெதரும் நினைவுக்கு வருவார். ஒரு பக்கம் நடிகை, இன்னொரு பக்கம் செவிந்திய இன போராளி என பன்முகம் கொண்ட சச்சின் லிட்டில் ஃபெதர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் தேறி ஓய்வெடுத்து வந்த நிலையில், தற்போது காலமாகியுள்ளார்.
உலகெங்கும் சக மனிதர்களால் திரைத்துறையில் தொடரும், ஒடுக்குதல், புறக்கணிப்புகள், பாலின கேலிகள், உருவக்கேலி, மாற்றுத்திறனாளிகள் குறித்த பார்வை உள்ளிட்ட பலவற்றுக்கும் எதிரான தொடர்ச்சியான விழிப்புணர்வை தன் வாழ்வின் மூலம் ஏற்படுத்தி வந்த சச்சின் லிட்டில் ஃபெதரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.