"CLIMAX-ல கீர்த்தி சுரேஷ இப்படி காட்ட நெனச்சோம்" - சாணி காயிதம் பெண் ஒளிப்பதிவாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சாணிக்காயிதம் திரைப்படத்தின் ஒளிப்பதிவு ரசிகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகின்றன.

Advertising
>
Advertising

Also Read | நடிகர் சாந்தனுவின் Insta கணக்குக்கு என்ன ஆச்சு?… அவரே வெளியிட்ட பரபரப்பு பதிவு!

சாணிக்காயிதம்…

ராக்கி படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்த படமாக ‘சாணிக்காயிதம்’சமீபத்தில் வெளியானது. இந்த படமும் ராக்கி போலவே வன்முறைக் காட்சிகளை அதிகமாகக் கொண்டுள்ள படமாகவே உருவாகியுள்ளது. இந்த படத்தின் போஸ்டர்கள், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை கொடுத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று அமேசான் ப்ரைம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகியுள்ளது.

கதைக்களம்…

ஒரே தந்தைக்கும் வேறு வேறு தாய்க்கும் பிறந்த அண்ணன் தங்கையாக செல்வராகவனும் கீர்த்தி சுரேஷும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  இருவரும் பொன்னி கதாபாத்திரத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷின் கணவர் மற்றும் குழந்தையை உயிரோடு எரித்துக் கொன்ற கும்பலை தேடி பழிவாங்குவதை ரத்தமும் சதையுமாக சொல்கிறது சாணிக்காயிதம். ராக்கி படம் போலவே படத்திலும் வன்முறை காட்சிகள் மிகவும் தீவிரத் தன்மையோடு உருவாக்கப்பட்டுள்ளன.

மேக்கிங்குக்கு குவியும் பாராட்டுகள்…

இந்த படத்தின் விமர்சனங்களில் முக்கியமானதாக படத்தின் மேக்கிங் குறித்து பேசப்பட்டு வருகிறது. மேலும் படத்தின் ஒளிப்பதிவாளர் யாமினி யஞ்சமூர்த்திக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து அவர் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேகமான நேர்காணலில் படத்தைப் பற்றி பல சுவார்ஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

க்ளைம்கேஸ்ல கீர்த்தி சுரேஷ்…

பலராலும் பேசப்படும் காட்சிகளில் ஒன்றான கிளைமேக்ஸ் காட்சி பற்றி சுவாரயஸ்மான தகவலைப் பகிர்ந்துள்ளார். கிளைமேக்ஸில் தியேட்டர் ப்ரொஷக்சன் ஒளி பின்புறம் வீச, கீர்த்தி சுரேஷ் முதுகில் அரிவாளோடு வில்லனைக் கொல்லுவார். இந்த காட்சியின் போது கீர்த்தி சுரேஷை ஒரு பெண் கடவுள் போல காட்ட விரும்பியே நாங்கள் அந்த காட்சியை அவ்வாறு அமைத்தோம் எனக் கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

"CLIMAX-ல கீர்த்தி சுரேஷ இப்படி காட்ட நெனச்சோம்" - சாணி காயிதம் பெண் ஒளிப்பதிவாளர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Saanikayitham cinematographer yamini talked about interesting facts

People looking for online information on சாணிக்காயிதம், Cinematographer yamini, Keerthy Suresh, Saanikayitham, Selvaraghavan will find this news story useful.