திண்டுக்கல், 17, பிப்ரவரி 2022: நாட்டுப்புறப் பாடல்களால் பட்டிதொட்டியெங்கும் பரவிய பாடல்களுக்கு சொந்தக் கார பாடகர்கள் செந்தில்கணேஷ் மற்றும் ராஜலட்சுமி செந்தில்கணேஷ் தம்பதி.
சூப்பர் சிங்கர் ஜோடி
பின்னர் இவர்கள் இருவருமே விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் இன்னும் உலகப்புகழ் அடைந்தனர். சூப்பர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடர்ச்சியாக பல பாடல்களை பாடிய இவர்களுக்கு பல ரசிகர்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளனர். அத்துடன் இவர்கள் பாடிய திரைப்பட பாடல்களும் அடுத்தடுத்து ஹிட் அடிக்கத் தொடங்கின.
சின்ன மச்சான்..
குறிப்பாக இவர்கள் பாடிய சின்ன மச்சான் பாடல் திரைப்படத்தில் இடம் பெற்றதுடன், பல ரசிகர்களிடத்தில் பரவி, அவர்களின் விருப்ப பாடலாக மாறியது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஒன்றாக எந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் அந்த பாடலை பாடச் சொல்லி ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
புஷ்பா பாடல்கள்..
இந்நிலையில் தான் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா மந்தன்னா, ஃபகத் ஃபாசில் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா திரைப்படத்தில், சமந்தா நடிப்பில் ஆண்ட்ரியா பாடி ஹிட் ஆன ‘ஓ சொல்றியா மாமா’ படலை போலவே, ராஜலட்சுமி பாடிய சாமி.. சாமி பாடலும் தெறி ஹிட் அடித்தது. தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த இந்த பாடலை விவேகா எழுதியிருந்தார்.
சாமி.. சாமி பாடலை பாடிய ராஜலட்சுமி
காதலரை உயர்வாக நினைத்து ஒரு எளிய பெண் பாடும் இந்த பாடலில், அப்பெண் தனக்கு பிடித்த அந்த ஆணை, ‘சாமி.. சாமி’ என சொல்லி அழைத்து தன் விருப்பங்களையும், ஆசைகளையும், முன்வைத்து வழக்குச் சொல்லில் பாடுவது போல் இந்த பாடல் உருவானது, இந்த பாடலை தனக்கே உரிய பாவங்களோடும், நாட்டுப்புற மற்றும் துள்ளலான முறையில் ராஜலட்சுமி பாடியுள்ளார்.
சாமி.. சாமி.. பாடல் பாடி வாக்கு சேகரிப்பு
இந்த பாடலுக்கு பலரும் இப்போது ரீல்ஸ் செய்து வரும் நிலையில், இந்த பாடலை ராஜலட்சுமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஆம், தமிழகத்தில் பிப்ரவரி 19-ஆம் தேதி நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சியினரும் பிரபலங்களின் உதவியுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்படித்தான், செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் திண்டுக்கல் 2வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சந்தோஷ் முத்து என்பவரை ஆதரித்து பிரச்சாரம் செய்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, ராஜலட்சுமி சாமி சாமி பாடலை பாடி அசத்தியுள்ளார்.
Also Read: அஜித்-ன் வலிமை படத்தில் யுவனுடன் இணைந்த இன்னொரு பிரபல மியூசிக் டைரக்டர்! மாஸ் எகிறுது!