நடிகர் சசிக்குமார் நடிப்பில் வெளியான ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சுசீந்திரன் ‘சாம்பியன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சாம்பியன் திரைப்படத்தில் புதுமுக நடிகர் விஸ்வா ஹிரோவாகவும், நடிகைகள் மிர்ணாளினி, சௌமியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன், நரேன், மனோஜ் பாரதிராஜா, முன்னாள் இந்திய கால்பந்து வீரர் ராமன் விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூலம் கார்த்திக் என்பவர் பின்னணி பாடகராக அறிமுகமாகிறார். ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி பாடல் ஷோவான ‘சரிகமபா’ நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிரபலமானவர் பாடகர் கார்த்திக். இளம் வயதிலேயே ஆட்டிசம் குறைபாடால் பாதிக்கப்பட்ட கார்த்திக், இந்த மியூசிக் ஷோவில் கலந்துக் கொண்டு தனது இசை திறமையால் பலரையும் வியக்க வைத்தார்.
‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த அர்ரோல் கரோலி இசையமைக்கும் ‘சாம்பியன்’ திரைப்படத்தில் பாடலாசிரியர் விவேகா எழுதிய பாடலை கார்த்திக் பாடியுள்ளார்.