தமிழ் சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் எஸ்.ஏ. சந்திரசேகர். நடுவே சில ஆண்டுகள் பெரிய அளவில் திரைப்படங்கள் இயக்காமல் இருந்து வந்த SAC, 'மாநாடு', 'கொடி' உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்தார். இதற்கு நடுவே, ஒரு சில திரைப்படங்கள் SAC இயக்கத்தில் வெளியாகவும் செய்திருந்தது.
Images are subject to © copyright to their respective owners
அந்த வகையில் நடிகர் சமுத்தரகனி, சாக்ஷி அகர்வால், சரவணன், இனியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள "நான் கடவுள் இல்லை" என்ற படத்தை இயக்கி உள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர். இப்படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது.
இந்த நிலையில் Behindwoods சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்துள்ளார். அதில் மகனும், நடிகருமான விஐய் குறித்தும், தனது இயக்குனர் பணி குறித்தும் நிறைய கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில், நடிகர் விஜய்யின் முதல் 5 திரைப்படங்களை இயக்கியது குறித்தும், நடிகர் விஜய்யின் அப்பா என குறிப்பிடும் போது தனக்கு நிறைய தேசிய விருதுகள் கிடைத்தது போன்ற உணர்வை தருவது பற்றியும் பல்வேறு கருத்துக்களை எஸ்.ஏ. சந்திரசேகர் பேசி இருந்தார்.
அப்போது, "நடிகர் அஜித் குமார் கூட உங்களுக்கு பழக்கம் இருக்கா?. அவருகிட்ட பேசுவீங்களா?" என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. இதற்கு பதிலளித்திருந்த எஸ்.ஏ. சந்திரசேகர், "எப்பயாவது பார்த்தா நல்லா பேசுவோம். 10, 15 வருசத்துக்கு முன்னாடி எல்லாம் அடிக்கடி மீட் பண்ணுவோம். இப்ப வந்து அவ்வளவா மீட் பண்றது இல்ல. இருந்தாலும் இப்ப எல்லாம் எங்கயாவது பார்த்தா அதே மரியாதை இன்னும் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.