SAC இயக்கத்தில் ஜெய் நடிக்கும் DOUBLE ஹீரோயின் படத்தின் பர்ஸ்ட் லுக் இதோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள கேப்மாரி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ‘டூரிங் டாக்கீஸ்’ திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘கேப்மாரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை அதுல்யா மற்றும் வைபவி ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும், இப்படத்தில் சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சித்தார்த் விபின் ஆகியோர் நடித்துள்ளனர். அடல்ட் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்திற்கு தற்போது தணிக்கைக்குழு ‘ஏ’சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்துள்ளார்.

இதுவரை 70 படங்களை இயக்கி உள்ள இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரில் உருவாகியுள்ள ‘கேப்மாரி’ திரைப்படம் நடிகர் ஜெய் நடிக்கும் 25வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

SA Chandrasekar, Jai and Athulya's Capmaari Film First Look

People looking for online information on Athulya Ravi, Jai, SA Chandrasekar, Vaibhavi Shandilya will find this news story useful.