BREAKING: புதிய PAN INDIA வில்லனாகும் S J சூர்யா! பிரபல முன்னணி தமிழ் ஹீரோவுடன் இணைகிறாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Chennai : பிரபல முன்னணி தமிழ் ஹீரோவுடன் புதிய PAN INDIA படத்தில் வில்லனாகும் S J சூர்யா!

Advertising
>
Advertising

விஷால்33

விஷால் நடிக்கும் 33-வது திரைப்படத்தைப்  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போகும் அறிவிப்பை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பான் இந்திய படமாக உருவாக உள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஆதிக் அறிவித்திருக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 2002 ஆம் ஆண்டு தொடங்கப்படும் என்றும், இதர படக்குழுவினருடைய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

நலிவடைந்த தெருக்கூத்து கலைக்கு புதுப்பொலிவு தரும் விஜய்சேதுபதி! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகர் S J சூர்யா

இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் S J சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த விஷால் - ஆதிக் படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரிக்கவுள்ளார். 'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்துள்ளார்.

ஆதிக் ரவிச்சந்திரன்

சிம்புவை வைத்து AAA படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் அடுத்து விஷாலை வைத்து இயக்க உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா, அமைரா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன் நடிப்பில் 'பஹீரா' படத்தை இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தின் பின் தயாரிப்பு பணிகள் எல்லாம் முடிந்து திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. ஆதிக், அஜித் நடிப்பில் 2019ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து இருந்தார்.

ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு.. தவறவிட்ட இயக்குனர் அல்போன்ஸ்.. அவரே சொன்ன பதில்

தொடர்புடைய இணைப்புகள்

S J Surya is the villain in Vishal Adhik Ravichandran

People looking for online information on Aadvik Ravichandran, அமைரா, ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா, ஜனனி ஐயர், ரம்யா நம்பீசன், S J சூர்யா, Sj suriyah, Vishal will find this news story useful.