"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே".. காதலர் தினத்தையொட்டி ஷோபா குறித்து S.A.C பகிர்ந்த வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் எஸ்.ஏ. சந்திர சேகர் தமது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தையொட்டி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சந்திரமுகி 1-ல் ஜோதிகா நடிப்பு பத்தி Part 2 -வின் 'சந்திரமுகி' கங்கனா சொன்னது என்ன?

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ.  இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களை இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

Images are subject to © copyright to their respective owners.

இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

Images are subject to © copyright to their respective owners.

கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை சந்திர சேகர் இயக்கி இருந்தார். இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் தமது டிவிட்டர் பக்கத்தில் காதலர் தினத்தையொட்டி மனைவி ஷோபா சந்திரசேகர் உடன் எடுத்த Throwback புகைப்படத்தை பகிர்ந்து, "அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே ❤️ இனிய காதலர் தினம்" என சந்திரசேகர் பதிவிட்டுள்ளார்.

Also Read | "அஜித் சாரை சூப்பர் ஸ்டார் மாதிரினு சொன்ன டயலாக்".. எதிர் நீச்சல் சீரியல் நடிகர் சாணக்யா EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

S A Chandrasekhar Post Throwback Photo for Valentines day

People looking for online information on S A Chandrasekhar Post, SA Chandrasekhar, Valentines Day will find this news story useful.