"இந்த கேள்வியை விஜய் கிட்ட போய் கேளுங்க".. பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு SAC பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் ‘தளபதி’ என்ற அடையாளத்துடன் வலம் வரும் முன்னணி ஹீரோ. 

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பிரபல இயக்குனராக விஜய்யின் பல திரைப்படங்களை தொடக்க காலத்தில் இயக்கியவர். விஜய்யை வைத்து படம் இயக்கும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் சில படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தமிழ் அல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர்.

இவரது மனைவி ஷோபா சந்திரசேகர், பின்னணி பாடகியாக, நடிகர் விஜய்யுடன் இணைந்து பாடிய பாடல்கள் உட்பட பல பாடல்களை பாடியுள்ளார். தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர்.

கடைசியாக 'மாநாடு' படத்தில் சிம்புவுடன் 'அறிவழகன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை சந்திர சேகர் இயக்கி இருந்தார்.
இந்த படம் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஶ்ரீ புத்திர காமுண்டீஸ்வரர் ஆலயம் சென்று எஸ்.ஏ. சந்திரசேகர் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட எஸ்.ஏ. சந்திரசேகர் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, "நடிகர் விஜய் அரசியலுக்கு வர வாய்ப்பு எதாவது இருக்கா சார்?" என்ற கேள்விக்கு "யாரை பற்றி கேட்கிறீங்க?.  விஜய் பற்றி விஜய்யிடம் தான் கேட்க வேண்டும்." என சந்திரசேகர் பதில் அளித்தார்.

Images are subject to © copyright to their respective owners.

Beast படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் 'வாரிசு' படம்  கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்கி இருந்தார்.

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

S A Chandrasekhar Answered about Vijay in Arani Temple

People looking for online information on Leo, S.A.Chandrasekhar, Vijay will find this news story useful.