உங்கள பாத்து PM கூட பயப்படுவாங்க..பாண்டேவை கலாய்த்த எஸ்.ஏ.சந்திரசேகர் !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீண்டும் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் தான் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் சரவணன் சுப்பையா.

Advertising
>
Advertising


மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர்.  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுத நரேன் பாலகுமாரன் இசை அமைத்துள்ளார்.


இரண்டு தந்தைகளை கொண்ட கதையம்சமாக உருவாகியுள்ள வித்யாசமான படம் தான் மீண்டும்.இந்த படத்திற்காக ஹீரோ கதிரவன் பல சண்டை காட்சிகளில் பல சவாலுடன் நடித்து இருக்கிறாரா என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்திற்கான டிரைலர் வெளியீடு  மற்றும் பாடல்கள் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.இதில் சிறப்பு விருந்தினர்களாக  திண்டுக்கல் லியோனி,  பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சினிமாவில் அனைவரும் நிலைப்பது இல்லை.ஒரு சிலர் மட்டுமே நிலையாக இருக்கின்றனர்.ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தால் சினிமா அவர்களை ஒதுக்குகிறது.ஆனால் அப்போதெல்லாம் அப்படி கிடையாது.விழுகரத்துக்கும் வழுக்கறதுக்கும் வித்யாசம் இருக்கு.சில நேரங்களில் விழுந்தா எந்திரிச்சிடலாம் ஆனா வழுக்கினா ரொம்ப கஷ்டம்.மீண்டும் படத்தின் காட்சிகளை கூறி அதற்காக நடிகர்கள் பட்ட கஷ்டத்தையும்,வலிகளையும் விளக்கினார்.சின்சியரா சினிமாவில் முயற்சி செய்தால் அது நம்மை விடவே விடாது. பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவை பார்த்து உங்கள பாத்து CM இல்ல PM கூட பயப்படுவாருனு சொல்றாங்க அப்டியே சார் .சொல்றாங்களே உங்கள பத்தி என்று கலாய்த்ததுடன். திறமை இருக்கிறது உங்களிடத்தில், அதனால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று கூறி அரங்கத்தை சிரிப்பில் ஆழ்த்தினார்.

உங்கள பாத்து PM கூட பயப்படுவாங்க..பாண்டேவை கலாய்த்த எஸ்.ஏ.சந்திரசேகர் ! வீடியோ

S A chandrasekar talks about pandey in meendum press meet

People looking for online information on Meendum, Rangarajpandey, Sachandrasekar will find this news story useful.