படப்பிடிப்புகள் இல்லாததாலும், திரையரங்குகள் திறக்கப்படாததாலும் பொருளாதார ரீதியான பாதிப்புகள் ஒருபக்கம் பிரபலங்களுக்கு ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு மறுபக்கம் என திரையுலகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி, இயக்குநர் தேஜா ஆகியோர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்திகள் ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது. அதில் இயக்குநர் ராஜமௌலி தான் பூரண குணமாகியுள்ளதாகவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தவுடன் பிளாஸ்மா தானம் வழங்குவேன் என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் 'ஆர்எக்ஸ் 100' பட இயக்குநர் அஜய் பூபதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கம் மூலம் அறிவித்துள்ள அவர், 'விரைவில் குணமாகி பிளாஸ்மா சிகிச்சை செய்வேன்' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags : Ajay Bhupathi, Coronavirus, Covid-19