"விஜய் கூட என்ன மாதிரியான படம் பண்ணுவீங்க?".. RJ பாலாஜி EXCLUSIVE பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமா துறைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் நடிகர் ஆர் ஜே பாலாஜி.

Advertising
>
Advertising

ரேடியோவில் இவர் செய்த சினிமா விமர்சனங்கள் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் கிடைத்தனர். சினிமாவுக்கு செலவளிக்கும் 120 ரூபாயை மையமாக வைத்தே இவருடைய சினிமா விமர்சனங்கள் புகழ் பெற்றன.

பின் காமெடியனாக நானும் ரவுடி தான், காற்று வெளியிடை, வடகறி போன்ற படங்களில் ஆர.ஜே. பாலாஜி நடித்தார். இவர் முக்கிய வேடத்தில் ஹீரோவாக நடித்த LKG மற்றும் மூக்குத்தி அம்மன் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

சமீபத்தில் பாலாஜி, போனி கபூர் தயாரிப்பில் இந்தி திரைப்படமான பதாய் கோ படத்தின் தமிழ் ரீமேக் "வீட்ல விசேஷம்" படத்தில் நடித்தார்.

"வீட்ல விசேஷம்" திரைப்படம் கடந்த  ஆண்டு ஜூன் 17, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் விமர்சகர்களிடம் பெரும் பாராட்டுக்களை பெற்று, வெற்றி பெற்றது.

'வீட்ல விஷேசம்' படத்தினை அடுத்து  ‘சர்தார்’ படத்தை தயாரித்த  பிரின்ஸ் பிக்சர்ஸ் S.லக்‌ஷ்மன் குமார் தயாரிப்பில் R.J.பாலாஜி ரன் பேபி ரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை 03.02.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தினை ஜியன் கிருஷ்ணகுமார்  இயக்கியுள்ளார்.  ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.

தற்போது ஆர். ஜே.  பாலாஜி, பிரபல இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு ஆர்.ஜே. பாலாஜி பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தளபதி விஜய்க்கு ஆர்.ஜே. பாலாஜி கதை கூறிய நிகழ்வு குறித்தும் அந்த படம் நடக்கும் பட்சத்தில் அப்படத்தின் தன்மை குறித்தும் பதில் அளித்தார். "எல்லாரிடமும் சொல்லிட்டேங்க. தமிழ் சினிமாவில் நிறைய இயக்குனர்கள் உள்ளனர். டெக்னிக்கலா ஸ்ட்ராங்கா இருக்குறவங்க. ஆக்சன் படங்கள், பிரம்மாண்ட படங்கள் செய்யும் இயக்குனர்களும் இருக்காங்க. ஆக்சன் படம் பண்ண விஜய் என்ன கூப்பிட்டு இருக்க மாட்டார். என்னோட ஸ்ட்ராங் எதுவோ அதை படத்துக்கு உள்ள கொண்டு வருவேன். விஜய் சாரோட வாய்ப்பு கிடைக்கும் போது பண்ணுவேன். விஜய் சாரை சந்திச்சு கதை சொன்னேன். ஆனால் அந்த படம் நடக்கவில்லை. டைம் அமையல‌. எதிர்காலத்தில் விஜய் சார் & அஜித் சார் கதை சொன்னாலும் மூக்குத்தி அம்மன் படம் போல என்னோட அம்சங்கள் இருப்பது போல படம் பண்ணுவேன்." என ஆர்.ஜே‌. பாலாஜி பதில் அளித்துள்ளார்.

"விஜய் கூட என்ன மாதிரியான படம் பண்ணுவீங்க?".. RJ பாலாஜி EXCLUSIVE பதில்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Run Baby Run Rj Balaji Answer about Film with Vijay question

People looking for online information on RJ Balaji, Vijay will find this news story useful.