எஸ். லக்ஷ்மன் குமார், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பிரமாண்டமாக தயாரித்து வரும் படம் ' சர்தார்'. நடிகர் கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டுவரும் படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
Also Read | R J பாலாஜி நடிக்கும் "வீட்ல விசேஷம்".. சென்சார் போர்டு கொடுத்த சான்றிதழ்! முழு தகவல்
நடிகர் கார்த்தியுடன் இந்த படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், சங்கி பாண்டே, லைலா, யூகி சேது, முனீஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இயக்குநர் P.S.மித்ரன் இயக்கும் இந்த படத்துக்கு G.V.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். ரூபன் படத்தொகுப்பை கவனித்துக்கொள்ள, கதிர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். திலீப் சுப்புராயன் இந்த படத்துக்கு சண்டைப்பயிற்சி அளிக்கிறார்.
சமீபத்தில் தான் இந்த படத்தின் படபிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்தது. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடிக்கிறார். இவர் சம்பந்தப்பட்ட முக்கியமான காட்சிகளுக்காக மட்டுமே அசர்பைசான் சென்று படமாக்கினார்கள் படக்குழுவினர்.
அதுவும், இது வரை ஷூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே ஷூட்டிங் நடத்தப்பட்டுள்ளது. அங்கு பாராளுமன்றம் நடைபெறுவது போலவும், அதில் வில்லன் சங்கி பாண்டே சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. இதை தவிரவும் பல இடங்களில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜார்ஜியாவிலும் படமாக்கப்பட்டது.
மொத்தமாக இந்த இரு இடங்களில் நடைபெற்ற படப்பிடிப்பு மற்றும் சண்டைக் காட்சிகளுக்காக மட்டுமே ரூபாய் 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து தற்போது சர்தார் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
PRO - Johnson.
Also Read | சிகிச்சைக்காக இன்று அமெரிக்கப் பயணம்….Airport-ல் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் TR