ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா நடித்துள்ள ஆர் ஆர் ஆர் திரைப்படம் நாளை மறுநாள் (மார்ச் 25) ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தெறிக்க விட்ட Toofan… ட்ரெண்ட்டிங்கில் KGF2 சிங்கிள்… யுடியூபில் சாதனை!
பாகுபலிக்குப் பின் ராஜமௌலியின் பிரம்மாண்டம்…
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கும் RRR படத்தை இயக்குனர் ராஜமௌலி இயக்கியுள்ளார். இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாகிறது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.
பேன் இந்தியா ரிலீஸ்…
பாகுபலியின் வெற்றி இயக்குனர் ராஜமௌலியை இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்க ஒரு இயக்குனராக ஆக்கியுள்ளது. இதையடுத்து அவர் இயக்கியுள்ள RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் இந்தியா முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்துக்கு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 5 நிமிடங்கள். RRR படம் மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. லைக்கா புரடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. படத்தின் வெற்றிக்காக இப்போது படக்குழுவினர் இந்தியாவின் புனித ஸ்தலங்களுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர்.
படத்துக்கான எதிர்பார்ப்பு…
ஆர் ஆர் ஆர் திரைப்படம் ரிலீஸாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக தெலங்கானா மற்றும் ஆந்திராவில் இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு பெரும் அளவில் உள்ளது. ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம்சரண் தேஜா என்ற இரு பெரும் மாஸ் ஹீரோக்கள் ஒரே படத்தில் இணைந்துள்ள நிலையில் அவர்கள் இருவரின் ரசிகர்கள் இந்த படத்தைக் கொண்டாட ஆர்வமாக உள்ளனர்.
தியேட்டர் உரிமையாளரின் பாதுகாப்பு
மாஸ் ஹீரோக்களின் படங்கள் ரிலிஸாகும் நாட்களில் முதல்நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் திரை இருக்கும் பகுதிக்கே சென்று ஆடிப்பாடி கொண்டாடுவது வழக்கம். ஆனால் இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் என்ற பகுதியில் உள்ள திரையரங்கில் ஸ்க்ரீனுக்கு அருகில் முள் வேலி அமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதே போல ஸ்க்ரீன் இருக்கும் மேடையில் ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளதாகவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் திரைக்கு அருகில் செல்வதை தடுக்கலாம் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. திரையரங்கின் உள் முள்வேலி மற்றும் ஆணி அடித்திருக்கும் புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.
கொரோனா காலத்தில் முத்தக் காட்சிகளை எடுத்தோம்”… அசோக்செல்வன் ஜாலி பேச்சு! –மன்மத லீலை Press meet