சிங்கங்களுக்கு மத்தியில் மனைவியுடன் ராம்சரண்.. வைரலாகும் டூர் போட்டோஸ் & வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR புகழ் நடிகர் ராம் சரண் தனது மனைவி உபசன்னாவுடன் ஆப்ரிக்காவில் சுற்றுலா சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. அவரே வெளியிட்ட வைரல் போட்டோஸ்!

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. நடிகர் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார்.
RRR படம் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது.

கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஜப்பானுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

நடிகர் ராம் சரண், தனது மனைவி உபசன்னாவுடன் இணைந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இந்திய இண்டர்நேஷனல் பள்ளிக்கு சென்று பள்ளி மாணவர்களை சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.

மேலும் டோக்கியோ நகரின் சாலையில் கையில் ரோஜா பூக்களை ஏந்தி ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி லட்சுமி ப்ரணதி, ராம் சரண், அவரது மனைவி உபசன்னா ஆகியோர் ஊர் சுற்றும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது.

இந்நிலையில் ராம் சரண் தனது மனைவி உபசன்னாவுடன் ஆப்ரிக்காவில் சுற்றுலா சென்றுள்ளார். தான்சானியா நாட்டில் உள்ள காடுகளில் சவாரி செல்லும் வீடியோ & புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன. ஆப்ரிக்க சிங்கங்கள் சூழ்ந்த நிலப்பரப்பில் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உபசன்னா பகிர்ந்துள்ளார். ராம் சரண் ஆலிவ் பச்சை நிற சட்டையும், பச்சை நிற பேன்ட் அணிந்து காணப்படுகிறார்.

தற்போது ராம் சரண், ஷங்கர் இயக்கத்தில் RC15 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து வருகிறார்.

 

Also Read | "ரொம்ப மகிழ்ச்சியான இரண்டு ரோல்".. இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி சொன்ன விக்ரம்!

தொடர்புடைய இணைப்புகள்

RRR Ram Charan with His wife Upasana in Africa Tanzania Vacation

People looking for online information on Africa Tanzania, Ram Charan, Ram Charan with His wife Upasana, RRR will find this news story useful.