திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பே ஆர்.ஆர்.ஆர். படத்தின் ரெக்கார்டு பிரேக்கிங் சாதனை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

ஆர்.ஆர்.ஆர் படத்தின் FirstLook வெளியானதுமே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரிக்க,  இப்படத்தின் போஸ்ட் பணிகள் நிறைவடைந்து, தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடைபெற்று வியாபாரமே வெற்றிகரமாக முடிந்துள்ளது. முன்னதாக இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான லைகா பெற்றிருந்ததாக கூறப்பட்டது.

இதனிடையே ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ள ராம் சரண் ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போர் நடத்திய ஆந்திர புரட்சி வீரரும் அல்லுரி சீதாராமராஜூ ராம்பா கலகம் செய்து பிரபலமானவருமான அல்லுரி சீதாராமராஜூ என்பவரின் கேரக்டரில் நடிக்கும் தகவல் வெளியாகியிருந்தது. தொடர்ந்து ஆல்யா பாட் உள்ளிட்டோரின் கதாபாத்திரமும் ரிவீல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் திரையரங்கு வெளியீட்டுக்கு முன்பாகவே அனைத்து இந்திய மொழிகளிலும் ஆர்.ஆர்.ஆர்.படத்தின் வெளியீட்டு உரிமத்தை  ZEE5 நிறுவனம் ரூ.325 கோடிக்கு கைப்பற்றி ரெக்கார்டு பிரேக்கிங் சாதனையை செய்துள்ள மாஸான தகவல் தற்போது வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் பட்டாசு குஷியில், மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்துள்ளனர். 

ஆர்.ஆர்.ஆர் படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி  வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: "ரொம்ப நன்றி அண்ணே!!".. மாஸ் காட்டிய மெகா ஸ்டார் சிரஞ்சீவி!.. நெகிழ்ந்து போன பொன்னம்பலம்!

தொடர்புடைய இணைப்புகள்

RRR post release digital and satellite rights sold for Rs 325 Cr

People looking for online information on Junior NTR, Ram Charan, RRR will find this news story useful.