Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும் திரைப்படம் RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) ஆகும்.
பாகுபலி, பாகுபலி-2 படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தை இயக்குகிறார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளன. ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார்.
தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் வெளியீடு, சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்த RRR படம் அடுத்த வருடம் 2022 ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகிறது. தல அஜித்தின் வலிமை படமும் பொங்கலுக்கு வெளியாவது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரபாஸின் ராதேஷ்யாம், பவன் கல்யானின் பீம்லா நாயக் படங்களும் பொங்கல் மஹா சங்கராந்திக்கு வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் டிசம்பர் - 3, 2021 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டமிட்டபடி படத்தின் டிரெயலர் டிசம்பர் - 3 அன்று வெளியாகாது என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.