பாகுபலி படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வரவிருக்கும் படம் "RRR".
சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி உருவாகிறது. இதில் ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தயாரிப்பு வடிவமைப்பை சாபுசிரில் கையாள்கிறார். படத்தின் எடிட்டிங் பணிகளை ஸ்ரீகர் பிரசாத் கையாள்கிறார். ராஜ மௌலியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்கிறார், இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார்.
2018 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சீல் நடந்து வருகின்றன. இந்நிலையில் படக்குழு தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே அறிவித்த அக்டோபர் மாத வெளியீடும் தள்ளிப்போவதாகவும், புதிய வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என டிவிட்டரில் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பது காரணமாக சொல்லப்படுகிறது.
சுதந்திர போராட்டம் பற்றிய கதை என்பதால், 2022 குடியரசு தினவிழாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.