RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "நீ உயரனும் என்பதே என் இலக்கு".. டைட்டில் வென்ற பின் மகனை சந்தித்த அசிம்.. உருக்கமான பதிவு!!
ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி இருந்த "RRR" திரைப்படம், வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி இருந்தது.
RRR படம் உலகம் முழுவதும் பல கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி பெரிய அளவில் சாதனைகளையும் படைத்திருந்தது. ஓடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி இருந்தது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து, கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் RRR படம் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், இதில் சிறந்த பாடலுக்கான விருதை "நாட்டு நாட்டு" பாடல் வென்றதையடுத்து இசையமைப்பாளர் கீரவாணி விருதை பெற்றுக் கொண்டார். இதனையடுத்து RRR திரைப்படம் மற்றும் நாட்டு நாட்டு பாடல், உலக அரங்கில் பல திரை ஜாம்பவான்களான ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்டோரின் பாராட்டுக்களை பெற்று இயக்குனர் ராஜமௌலிக்கும் பெரிய கவுரவத்தை பெற்று கொடுத்திருந்தது.
நாட்டு நாட்டு பாடல், கோல்டன் குளோப் அரங்கில் வெற்றி பெற்றிருந்ததால் அதனை விட உயரிய விருதான ஆஸ்கார் விருதுகள் மேடையிலும் தேர்வாகுமா என பலரும் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில் தற்போது ஆஸ்கார் விருதுக்கான நாமினேஷன் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஒரிஜினல் சாங் என்ற பிரிவில், RRR படத்தில் வரும் நாட்டு நாட்டு பாடல் தேர்வாகி உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட திரைப்படத்தின் பாடல், தற்போது ஆஸ்கார் விருதின் நாமினேஷன் பிரிவில் இடம்பெற்றுள்ளது, ஒட்டுமொத்த RRR படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Image Credit : The Academy Twitter
கோல்டன் குளோப் விருதினை வென்றது போல, ஆஸ்கார் விருதையும் நாட்டு நாட்டு பாடல் வெல்லும் என்றும் பலரும் குறிப்பிட்டு தற்போதில் இருந்தே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 95 ஆவது ஆஸ்கார் விருதுகள், இந்திய நேரப்படி மார்ச் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | Bigg Boss வீட்டில் இருந்து வந்த பிறகு.. Vikraman பகிர்ந்த வீடியோ.. ரசிகர்களுக்கு சொன்ன சூப்பர் நியூஸ்