'RRR' படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமை... கைப்பற்றிய பிரபல முன்னணி நிறுவனங்கள்! செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: RRR படத்தின் ஒடிடி உரிமையை பிரபல நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளன.

RRR Movie OTT Digital Rights Bagged By Zee5 and Netflix
Advertising
>
Advertising

ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது. டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்'-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் திரு  சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

RRR Movie OTT Digital Rights Bagged By Zee5 and Netflix

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

இந்த படத்துக்கு CBFC மூலம் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம்  3 மணி நேரம் 5 நிமிடங்கள். இந்நிலையில் RRR படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி ஒடிடி உரிமையை ஜி5 கைப்பற்றியுள்ளது. ஹிந்தி மொழி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அதேபோல் ஆங்கிலம், போர்த்துகீசிய, துருக்கிய, ஸ்பானிய, கொரிய மொழிகளின் ஒடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. 

RRR படத்தின் ஆரம்ப டைட்டில் கார்டில் இந்த தகவலை படக்குழு Official ஆக அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RRR Movie OTT Digital Rights Bagged By Zee5 and Netflix

People looking for online information on Netflix, Raja Mouli, RRR, RRR Movie, RRR OTT, RRROTT, Zee5 will find this news story useful.