ஆஸ்காருக்கு அடுத்த உலகின் மிக உயரிய கோல்டன் குளோப் விருதுக்கு தகுதி பெற்ற RRR.. முழு விவரம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

Advertising
>
Advertising

Also Read | Rajinikanth: பேர பிள்ளைகளுடன் சூப்பர் ஸ்டார்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமான பதிவு

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் தற்போது கோல்டன் குளோப் விருதுக்கு இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்காருக்கு அடுத்த உலகின் மிக உயரிய விருதான கோல்டன் குளோப் விருதில் சிறந்த அயல்நாட்டு (ஆங்கில மொழி அல்லாத) திரைப்படம் மற்றும் சிறந்த பாடலுக்கான பிரிவுகளில் RRR திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி கோல்டன் குளோப் விருது விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

 

Also Read | துணிவு சில்லா சில்லா பாட்டு எப்படி இருக்கு? செம்ம பதில் அளித்த லோகேஷ்!

தொடர்புடைய இணைப்புகள்

RRR Movie Nominated for Golden Globe Awards

People looking for online information on Golden Globe Awards, Jr ntr, Ram Charan, RRR, RRR Movie, SS Rajamouli will find this news story useful.