பிரபல பாகுபலி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் 'ரத்தம் ரணம் ரெளத்திரம்' எனும் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது RRR (ஆர்.ஆர்.ஆர்) படம்.

மஹதீரா, பாகுபலி 2 பாகங்களைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்திலான இந்த பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முதன்மைக் கதாபாத்திரங்களில் கைகோர்த்து நடிக்கின்றனர். இவர்களுடன் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். எஸ்.எஸ். மரகதமணி (தமிழில் எம்.எம்.கீரவாணி என்கிற புனைப்பெயரில்) இசையமைத்துள்ளார்.
டிஜிட்டல் உரிமங்கள்
பெரும் பொருட்செலவில் இந்த திரைப்படத்தை டிவிவி நிறுவனம் தயாரிக, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்த படம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தப் படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பிரபல பென் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியது.
இதனிடையே ஆர்.ஆர்.ஆர். படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழியின் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமைகளை ஜீ 5 நிறுவனமும் இந்தி மொழியின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் கைப்பற்றியுள்ள தகவல்கள் அண்மையில் வெளியாகியிருந்தன.
தமிழ் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி உரிமம்
குறிப்பாக தெலுங்கு, தமிழ், கன்னட மொழிகளுக்கான தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் குரூப் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதாவது ஆர்.ஆர்.ஆர். படத்தின் தமிழ் வெர்ஷனின் ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை ஜீ5 ஓடிடி தளமும், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியும் கைப்பற்றியுள்ளன.
கீர்த்தி சுரேஷ் நாட்டு நாட்டு டான்ஸ்
இத்தனை எதிர்பார்ப்புகள் நிறைந்த இந்த திரைப்படத்தில் அண்மையில் நாட்டு நாட்டு எனும் நாட்டுக்கூத்து பாடலும், அதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரின் புழுதி பறக்கும் ஆட்டமும் பிரபலமானது. இந்நிலையில் இந்த டான்ஸ் ஸ்டெப்களை தான் ஒரு நிகழ்வில் ராம் சரணுடன் சேர்ந்து கீர்த்து சுரேஷ் ஆடி கலக்குகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சாயா சிங் நடிப்பில் புதிய மெகா சீரியல்! பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு.. TRP எகிறப் போகுது!