சென்னை: சத்யம் தியேட்டரில் 6 ஸ்க்ரீனில் 5 ஸ்க்ரீன் RRR படத்துக்குத்தான் என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியாக கூறியுள்ளார். RRR படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் S.S ராஜமெளலி. இவர் பாகுபலி,பாகுபலி 2, நான் ஈ போன்ற படங்களை இயக்கி இந்திய சினிமாவை உயர்த்தியவர்.
இவர் தற்போது RRR படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அலியா பட் , அஜய் தேவ்கன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.
பிரம்மாண்ட படம்
RRR படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். DVV Entertainment தயாரிக்கும் இந்த படத்திற்கு, எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார். கே கே செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஜனவரி 7 உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
உதயநிதி பங்கேற்பு
இந்நிலையில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு ஒரே காரணம் ராஜமெளலி சார் தான். நான் அவரது தீவிர ரசிகன். நடிகர் ராம் சரண் மற்றும் அவரது ரசிகர்களுக்கும், ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது ரசிகர்களுக்கும்,RRR படத்தின் டெக்னீசியன்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். ராஜமெளலி சார் வந்தவுடன் நான் கூறியது, இந்தப் படம் பாகுபலி 2 படத்தின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து விடும் என்பது தான். ஏனென்றால், இந்தப் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் அவ்வளவு அருமையாக இருந்தது.
நல்ல வேல சொல்லல
சிவகார்த்திகேயனை அழைத்த மாதிரி, என்னையும் நடனமாட அழைப்பார்கள் என நினைத்தேன். எனக்கு நடனம் சுத்தமாக வராது. மேலும் சிலபேருக்கு நடனமாடினால் தான் கால் வலிக்கும், கழுத்து சுளுக்கும் ஆனால் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடனத்தை பார்த்தாலே எனக்கு கழுத்து சுளுக்குகிறது என்று கலகலப்பாக பேசினார். இந்த படத்திற்கும் எனக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது. நான் பத்து வருடங்களுக்கு முன்பு ரெட் ஜெயன்ட் மூவிஸ் கம்பெனியை தொடங்கினேன். அப்பொழுது ராஜமௌலி இயக்கிய "மகதீரா" படம் வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. நான் அந்தப் படத்தை தமிழில் "மாவீரன்"என டப் செய்து ரிலீஸ் செய்தேன். அப்போது ராஜமௌலி சார் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தார். சத்யம் திரையரங்கில் பெரிய ஸ்க்ரீனில் இதை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று, நாங்களும் அதை செய்தோம். படம் தமிழ்நாடு முழுக்க 4 கோடி வரை ஷேர் செய்தது. இப்பொழுதும் RRR படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயிண்ட் தான் ரிலீஸ் செய்தது. தற்போதும் சத்யம் திரையரங்கில் 6 Screen- ல் 5 Screen-களில் இந்தப் படம்தான் ஓடும் எனக்கூறினார்.
வெற்றி உறுதி
RRR படத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. சில படங்களின் குழுவிற்கு ஒரு சில டென்ஷன்கள் இருக்கும். ஆனால், ராஜமௌலி மற்றும் அவரது குழுவிற்கு அந்த டென்ஷன் எல்லாம் இல்லை. நீங்கள் பெரிய பெரிய படங்கள் பிரம்மாண்டமாய் இயக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய சினிமாக்களுக்கு இந்த RRR படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். என்னை அழைத்த லைகா சுபாஸ்கரன் மற்றும் இந்த டீம் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், எனக் கூறினார்.