பாகுபலி-2 வசூலை முறியடித்த RRR.. ஜப்பானில் மட்டும் இத்தனை கோடி வசூலா! மாஸ் சம்பவம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR திரைப்படம் ஜப்பானில் பாகுபலி- 2 படத்தின் வசூலை  முறியடித்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தெலுங்கிலும் அசத்தும் லவ் டுடே.. பிரதீப் ரங்கநாதனை தூக்கி கொண்டாடும் ரசிகர்கள்! வைரல் வீடியோ

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது.

இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு.

RRR படம் உலகம் முழுவதும் 1100 கோடி ரூபாய்க்கும் மேல்  வசூலாக ஈட்டியது. ஒடிடியில் இந்த படம் வெளியான பிறகும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது.

கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இந்த படம் ஜப்பான் திரையரங்குகளில் ஜாப்பனிஷ் மொழியில் வெளியாகி உள்ளது. ஐமாக்ஸ் 3டியிலும் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதற்கான ப்ரோமோஷன் நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஜப்பானுக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 34 நாட்களில் RRR திரைப்படம் ஜப்பானில் 305 மில்லியன் ஜப்பானிய யென்னை (இந்திய ரூபாய் மதிப்பில் 17.87 கோடி ரூபாய்) வசூலாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. 33 நாட்களில் 2,03,867 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து உள்ளன.  அதிவேகமாக இந்த சாதனையை படைத்த முதல் இந்திய திரைப்படமாக RRR அமைந்துள்ளது.

இதுவரை ஜப்பான் நாட்டில் ரிலீஸ் ஆன படங்களில் வசூலில் RRR திரைப்படம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த முத்து திரைப்படமும், மூன்றாவது இடத்தைப் பாகுபலி -2 படமும் பிடித்துள்ளன.

Also Read | "உயிரோட இருக்கேன்".. 90S சீரியல் நடிகர் வேணு அரவிந்த் இப்போ எப்படி இருக்கார்? Exclusive

தொடர்புடைய இணைப்புகள்

RRR Movie Beat Bahubali 2 Collection in Japan

People looking for online information on Bahubali 2, Japan, RRR, RRR Box Office Collection in Japan will find this news story useful.