மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த ஜூனியர் என்டிஆர்.. டிரெண்ட் ஆகும் அமித்ஷா ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மத்திய அமைச்சர் அமித்ஷாவை நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து உள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் ஜூனியர் என்டிஆரை சமீபத்தில் ஹைதராபாத்தில் சந்தித்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

இருவரும் கைகுலுக்கிக் கொண்ட புகைப்படமும்,  இருவரும் பூங்கொத்தை வைத்துக்கொண்டு கேமராவைப் பார்த்து சிரிக்கும் ஒரு படமும். இருவரும் அமர்ந்து  உரையாடும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த சந்திப்பில் நடிகர் ஜூனியர் என்டிஆர் வெளிர் நீல நிற சட்டை  மற்றும் கருப்பு பேன்ட் அணிந்திருந்தார். சந்திப்பு படங்களை பகிர்ந்த அமித் ஷா, "ஒரு திறமையான நடிகரும், நமது தெலுங்கு சினிமாவின் ரத்தினமான ஜூனியர் என்டிஆருடன் ஹைதராபாத்தில் நல்ல உரையாடல்" என்று தெலுங்கில் பதிவிட்டுள்ளார்.

இதை தனது ட்விட்டர் கணக்கில் ரீட்வீட் செய்த ஜூனியர் என்.டி.ஆர், "உங்களைச் சந்தித்தது மற்றும் ஒரு மகிழ்ச்சியான உரையாடலில் மகிழ்ச்சியாக இருந்தது அமித் ஷா ஜி. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி." என‌ எழுதி உள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சமீபத்தில் காணப்பட்ட ஜூனியர் என்டிஆர், அடுத்து NTR30-ல் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக ராம் சரணுடன் இணைந்து நடித்தார். அப்படத்தில் உள்ளூர் பழங்குடியினரின் பாதுகாவலரான கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்திருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

RRR Jr NTR meet Union Minister Amith Shah Viral Photos

People looking for online information on Amit shah, BJP, Jr ntr, RRR will find this news story useful.