KGF புகழ் பிரசாந்த் நீல்லின் 20 ஆண்டு கால கனவுப்படம்.."NTR 31" படத்தின் மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR நாயகன் ஜீனியர் என் டி ஆர்,  கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் கைகோர்க்கும் NTR31 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | அம்மாடியோ! KGF இயக்குனர் & பிரபாஸ் இணையும் "சலார்".. படத்தோட பட்ஜெட் இம்புட்டு கோடியா? மாஸ் தகவல்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர் முதன்முறையாக ராம் சரண் உடன் நடித்தார். உள்ளூர் பழங்குடியினரின் பாதுகாவலரான கொமரம் பீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரம்மாண்டமான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் சமீபத்தில் காணப்பட்ட ஜூனியர் என்டிஆர், அடுத்து NTR30-ல் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஜூனியர் NTR ஏற்கனவே ஜனதா கேரஜ் படத்தில் சிவா இயக்கத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை முடித்த பின் ஜூனியர் என்டிஆர் படத்தை (NTR31) மைத்ரி மூவி மேக்கர்ஸ்காக பிரசாந்த் நீல் இயக்க உள்ளார்.

ஜூனியர் என்டிஆர் மற்றும் பிரசாந்த் நீல் இருவரும் தற்போது முறையே RRR மற்றும் KGF: Chapter 2 ஆகிய படங்களின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்படும் சூப்பர் ஸ்டார்களாக மாறியுள்ளனர். இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் ₹1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Mythri Movie Makers & NTR Arts தயாரிக்கும் NTR31 படத்தின் முதல் லுக் போஸ்டர் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

"இரத்தத்தில் நனைந்த மண் மட்டுமே நினைவில் கொள்ளத்தக்கது!! அவனது மண்..... அவனது ஆட்சி! ஆனால் சிந்தியது  அவனுடைய இரத்தம் அல்ல..." என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியானது.

"இது 20 ஆண்டுகளுக்கு முன்பு என் மனதில் தோன்றிய ஒரு யோசனை, ஆனால் படத்தின் பரிமாணம் மற்றும் பிரமாண்டம் என்னைத் தடுத்து நிறுத்தியது. இறுதியாக எனது கனவுத் திட்டத்தை எனது கனவு நாயகனுடன் உருவாக்குவதற்கான களம் இன்று அமைந்துள்ளது." என‌ பிரசாந்த் நீல் கூறியது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பிரசாந்த் நீல், "என்.டி.ஆர் 31 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சலார் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு துவங்கும்" என்று பேசியுள்ளார்.

Also Read | மம்மூட்டி - ரம்யா பாண்டியன் நடிக்கும் புதிய படம்.. ரசிகர்களை கவரும் புதிய போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

RRR Jr NTR KGF Prashanth Neel NTR 31 shooting Update

People looking for online information on Jr ntr, KGF, NTR 31, NTR 31 shooting Update, Prashanth Neel, RRR will find this news story useful.